நாவில் வைத்தாலே ருசி ஊறும் செட்டிநாடு குழி பணியாரம்! இன்னைக்கே செஞ்சு அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நாவில் வைத்தாலே ருசி ஊறும் செட்டிநாடு குழி பணியாரம்! இன்னைக்கே செஞ்சு அசத்தலாம்!

நாவில் வைத்தாலே ருசி ஊறும் செட்டிநாடு குழி பணியாரம்! இன்னைக்கே செஞ்சு அசத்தலாம்!

Suguna Devi P HT Tamil
Nov 22, 2024 04:27 PM IST

காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவாக பணியாரம் இருந்து வருகிறது. இதனை செட்டிநாடு பகுதிகளில் அதிகமாக சாப்பிடுகின்றனர்.

நாவில் வைத்தாலே ருசி ஊறும் செட்டிநாடு குழி பணியாரம்! இன்னைக்கே செஞ்சு அசத்தலாம்!
நாவில் வைத்தாலே ருசி ஊறும் செட்டிநாடு குழி பணியாரம்! இன்னைக்கே செஞ்சு அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

பணியாரத்திற்கான மாவு அரைக்க

1 கப் பச்சரிசி 

கால் கப் உளுத்தம் பருப்பு

1 டீஸ்பூன் வெந்தயம் 

2 கப் தண்ணீர்

அரை டீஸ்பூன் உப்பு

தாளிக்க

2 டீஸ்பூன் எண்ணெய் 

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 

2 டீஸ்பூன் கடலை பருப்பு 

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன்  சீரகம்

1 டீஸ்பூன் பெருங்காய தூள் 

சிறிய துண்டு இஞ்சி 

2  மிளகாய் 

1 பெரிய வெங்காயம் 

1 டீஸ்பூன் உப்பு 

சிறிதளவு கறிவேப்பிலை 

அரை மூடி துருவிய தேங்காய் 

கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் பச்சரிசி, உளுத்தம் பருப்பு மற்றும்  வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சரியாக 3 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த அரிசியை மற்றும் பருப்பை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றி, சிறிது தண்ணீர் கலந்து குறைந்தது 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். அப்போது தான் பணியாரம் சுவையானதாக இருக்கும். இந்த மாவு புளித்த பின்னர் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்காவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், பெருங்காய தூள், நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வறுக்கவும். மேலும் அடுத்து கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இந்த கலவையை புளித்த மாவினுள் போட வேண்டும். இந்த மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவை சரிபார்த்து, மாவை ஒதுக்கி வைக்கவும். மேலும் அடுப்பில் பணியாரம் சட்டியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ளவும். ஒவ்வொரு குழியிலும் போதுமான அளவு எண்ணெய் தடவவும். மாவை மெதுவாக குழிகளில் ஊற்றி, அனைத்து பணியாரங்களுக்கும் கீழ் பக்கம் முழுவதுமாக பொன்னிறமாக மாறும் வரை வேக விட வேண்டும். மறுபுறம் திருப்பி, அவையும் பொன்னிறமாக மாறும் வரை வேக விட வேண்டும். பணியாரம் இருபுறமும் நன்றாக வெந்ததும், சட்டியியில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான செட்டிநாடு குழி பணியாரம் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.