அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி?

அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Oct 29, 2024 06:56 PM IST

அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி?
அதிரசம் இல்லாத தீபாவளியா? மாவை புளிக்க வைக்க நேரமில்லையா? இன்ஸ்டன்டாக செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பொடித்த வெல்லம் – 300 கிராம்

அரிசி மாவு – 300 கிராம்

கோதுமை மாவு – 100 கிராம்

நெய் – ஒரு டேபிள் ஸ்ழுன்

ஏலக்காய்த்தூள் – கால் ஸ்பூன்

சுக்குத்தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

இந்த அதிரசம் செய்வதற்கு மாவும், தண்ணீரின் அளவும் மிகவும் முக்கியம்.

வெல்லம் முக்கால் கப் எடுத்தீர்கள் என்றால், அதே கப்பில் முக்கால் கப் அரிசி மாவு மற்றும் கால் கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் கால் கப் எடுக்கவேண்டும்.

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை சிம்மில் எரியவிட்டு, பொடித்த முக்கால் கப் வெல்லத்தை அதில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகுக்கு கதம் தேவையில்லை. வெல்லம் கட்டிகள் இன்றி நன்றாக பால் போல கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, அரிசி மாவு, கோதுமை மாவு, ஏலக்காய் மற்றும் சுக்குத் தூள்கள் போட்டு கிளறவேண்டும். இதுபோல் நீங்கள் கிளறும்போது முதலில் மாவுக் கலவை ட்ரையாக இருக்கும். உடனே தண்ணீர் சேர்த்துவிடக்கூடாது, கிளறக் கிளற மாவு வெல்லத்தில் கலந்து நல்ல கெட்டியாகவரும்.

இப்போது மீண்டும் அடுப்பை பற்ற வைத்து மிகக் குறைவாக எரிய விட்டு, அதில் வைத்து, ஒன்றரை நிமிடங்கள் கிளறவேண்டும். கிளறிய கலவை பால்கோவா போல வந்ததும் இறக்கிவிடவேண்டும்.

இந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி கை பொறுக்கும் சூட்டில் ஆறவிட்டு நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பிசைந்த பூரி மாவு போல ஆகிவிடும்.

இதிலிருந்து சிறு அளவு, மாவை எடுத்து கைகளில் உருட்டி ஒரு சிறிய வாழை இலையில் நெய் தடவி அதில் வைத்து தட்டவும் இந்த அதிரசத்தை கனமாக தட்டிப் பொரித்தால் உட்புறம் சரியாக வேகாது.

காஜுகத்லி கனத்திற்கு தட்டிக்கொள்ளவேண்டும். ரொம்ப மெலிசாக தட்டினால் முறுகலாகிவிடும் நடுவில் துளை செய்வது உங்கள் விருப்பம். அடுப்பில் சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதிரசங்களை ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

சூப்பர் சுவையான இன்ஸ்டன்ட் அதிரசம் தயார். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.