சாஃப்ட்டான பன் தோசை செய்வது எப்படி? காலை உணவுக்கு கரெக்ட்டான சாய்ஸ்! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட்டான பன் தோசை செய்வது எப்படி? காலை உணவுக்கு கரெக்ட்டான சாய்ஸ்! ஈசி ரெசிபி!

சாஃப்ட்டான பன் தோசை செய்வது எப்படி? காலை உணவுக்கு கரெக்ட்டான சாய்ஸ்! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 14, 2024 09:05 AM IST

அனைவருக்கும் தெரிந்த பொருட்களை வைத்தே உணவுகளில் புதுமையை புகுத்த முடியும். அப்படி புதுமையான முயற்சியில் வந்தது தான் பன் தோசை, இது மிகவும் சாஃப்ட்டாக சாப்பிடவும் மென்மையாக இருக்கும். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள் .

சாஃப்ட்டான பன் தோசை செய்வது எப்படி? காலை உணவுக்கு கரெக்ட்டான சாய்ஸ்! ஈசி ரெசிபி!
சாஃப்ட்டான பன் தோசை செய்வது எப்படி? காலை உணவுக்கு கரெக்ட்டான சாய்ஸ்! ஈசி ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 கப் ரவை

1 கப் தயிர் (தயிர் நன்றாக புளித்திருக்க வேண்டும்) 

1 டீஸ்பூன் கடலை பருப்பு 

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் சீரகம் 

ஒரு பெரிய வெங்காயம் 

 2 பச்சை மிளகாய் 

சிறிதளவு கறிவேப்பிலை

1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 

 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலை

1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு 

தேவையான அளவு உப்பு

சிறிதளவு சோடா உப்பு

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் ரவை, புளித்த தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். மேலும் இந்த கலவையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தோசை மாவு பதத்தில் இது இருக்க வேண்டும். கூடுதலாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில்  மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சேர்த்து வறுக்கவும். இவை பொன்னிறமாக வந்தவுடன் அதன் உடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கி, கால் டீஸ்பூன் பெருங்காய தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து மாவில் சேர்க்கவும்.

மேலும் இந்த மாவு கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும். பின் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக மாவை ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி விட்டு வேக விடவும். இரண்டு பக்கமும் வெந்ததும், கரண்டியில் இருந்து எடுத்து விடவும். மிகவும் சாஃப்ட்டான பன் தோசை தயார். இதனை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து நீங்களும் சாப்பிட்டு மகிழுங்கள்.  பஞ்சு போன்று இருக்கும் இந்த பன் தோசையை உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்  என அனைத்து வயதினரும் இந்த பன் தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.