வாழ்வை மாற்றும் வரகு அரிசி உப்புமா? இப்போவே தெரிஞ்சுக்கோங்க எப்படி செய்வது? மாஸ் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாழ்வை மாற்றும் வரகு அரிசி உப்புமா? இப்போவே தெரிஞ்சுக்கோங்க எப்படி செய்வது? மாஸ் ரெசிபி!

வாழ்வை மாற்றும் வரகு அரிசி உப்புமா? இப்போவே தெரிஞ்சுக்கோங்க எப்படி செய்வது? மாஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 19, 2024 03:21 PM IST

உடலுக்கு நன்மை பயக்கும் வரகு அரிசியை வைத்து சுவையான உப்புமா செய்யலாம். இந்த உப்புமா செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

வாழ்வை மாற்றும் வரகு அரிசி உப்புமா? இப்போவே தெரிஞ்சுக்கோங்க எப்படி செய்வது? மாஸ் ரெசிபி!
வாழ்வை மாற்றும் வரகு அரிசி உப்புமா? இப்போவே தெரிஞ்சுக்கோங்க எப்படி செய்வது? மாஸ் ரெசிபி!

தேவையான பொருட்கள்

ஒரு கப் வரகரிசி

ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு 

ஒரு டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு

4 டீஸ்பூன் நெய்

ஒரு டீஸ்பூன் கடுகு 

1 பெரிய வெங்காயம் 

6 பச்சை மிளகாய்

கொத்தமல்லி இலை

சிறிதளவு இஞ்சி துண்டு  

சிறிதளவு கறிவேப்பிலை

2 கேரட் 

7 முதல் 8 பீன்ஸ் 

தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் வரகு அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு குக்காரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ நெய் சேர்த்து சூடாக்கவும். சூடான பின்னர் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு சேர்த்து வறுக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஊற வைத்து எடுத்த அரிசியை இதில் போட வேண்டும். 

 இதனை மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து அழுத்தம் குறையும் வரை பத்து நிமிடம் தனியாக வைக்கவும். விசில் அடங்கியதும் அதனை எடுத்து நன்றாக கிளறி கொத்தமல்லி தலையை போட்டு கிளறவும். இப்பொழுது மிகவும் சுவையான வரகு அரிசி உப்மா தயார். இதனை சாப்பிட்டால் பல பலன்கள் கிடைக்கும். 

வரகு அரிசியின் பயன்கள் 

இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வயதானவர்களுக்கு வரும் மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு. கூடுதலாக நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது சிறப்பான நன்மைகளை அளிக்கும். 

வரகு அரிசியில்  நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் காரணத்தினால் வரகு அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் வயித்துலயும், குடல்லயும் இருக்குற புண்கள் குணமாறதுக்கு உதவிசெய்றதோட, மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும் வல்லமை இதற்கு உள்ளது. தாது உப்புக்கள், இரும்புச் சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்து என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உடலை வலிமையாக்கவும், நோயில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.