குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது! உளவியல் சிகிச்சைக்கு உதவும் அசத்தல் ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது! உளவியல் சிகிச்சைக்கு உதவும் அசத்தல் ஆய்வு!

குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது! உளவியல் சிகிச்சைக்கு உதவும் அசத்தல் ஆய்வு!

Priyadarshini R HT Tamil
Nov 10, 2024 07:00 AM IST

குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குடல் ஆரோக்கியத்தை காக்க என்ன செய்யவேண்டும் பாருங்கள்.

குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது! உளவியல் சிகிச்சைக்கு உதவும் அசத்தல் ஆய்வு!
குடல் ஆரோக்கியம் உடலுக்கு மட்டுமல்ல மனதையும் காக்கிறது! உளவியல் சிகிச்சைக்கு உதவும் அசத்தல் ஆய்வு! (Unsplash)

இந்த ஆய்வை அயர்லாந்தைச் சேர்ந்த கார்க் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் ஏபிசி நுண்ணுயிர் மையம் செய்துள்ளது. உடலின் அழுத்தத்தைப்போக்க குடலில் உள்ள டிரில்லியன் கணக்கிலான நுண்ணுயிர்கள் தான் உதவுகின்றன என ஆய்வு கூறுகிறது. இதனால் மூளை மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க இந்த முறையில் சிகிச்சையளிக்க இந்த ஆய்வு வழிவகுத்துள்ளது.

குடல் நுண்ணுயிரிகளும், சிர்கார்டியன் ரிதமும், மனஅழுத்த பதிலும்

உடலின் மத்திய மனஅழுத்த பதிலளிக்கும் மண்டலமாக ஹைப்போதெலாமிக் பிட்யூட்ரி அட்ரினல் உள்ளது. இது குடல் நுண்ணுயிர்கள் மற்றும் இதற்கும் உள்ள தொடர்பை ஆய்வுசெய்து, செல் வளர்சிதையில் வெளியிட்டுள்ளது. குடலில் உள்ள நுண்ணுயிர்கள் குறைந்தால் அது பிட்யூரியை அதிகம் சுரக்கச் செய்து, மூளையின் அழுத்தத்தை அதிகரித்து, உடலின் சிர்கார்டியன் ரிதத்தை பாதிக்கிறது. இதனால் நாள் முழுவதும் உடலில், மனதில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

லாக்டோபாசிலஸ் போன்ற குறிப்பிட்ட சில பாக்டீரியாக்கள், உங்கள் உடலின் சிர்கார்டியன் ரிதத்துக்கு முக்கியமானவை. அதை அடிப்படையாகக் கொண்டு மனஅழுத்தத்தை முறைப்படுத்துகின்றன. இது உடலில் மனஅழுத்த ஹார்மோனை அதிகரிப்பது, குடல் நுண்ணுயிர்களுடன் தொடர்புகொள்வதை ஆய்வு விளக்குகிறது.

இதனால் உளவியல் சிகிச்சையில் நீங்கள் குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதன் மூலம் மனஅழுத்தத்தைக் கையாள முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே மனஅழுத்த சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் குடல் பாக்டீரியாக்களை உருவாக்குவதாகவும் இருக்கலாம். இன்றைய நவீன வாழ்க்கை முறையில், சிர்கார்டியன் ரிதம், முறையற்ற உறக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் அதிக மனஅழுத்தம், சரியாக சாப்பிட முடியாமல் போவதாக ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் குடல் பாக்டீரியாக்களை நல்ல முறையில் நீங்கள் பராமரித்தால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

குடல் பாக்டீரியாக்கள்

இந்த ஆய்வை செய்த பேராசிரியர் ஜான் கிரைன் கூறுகையில், எங்கள் ஆய்வு குடல் பாக்டீரியாக்களுக்கும், மனஅழுத்தத்துக்கு நமது மூளை குறிப்பிட்ட வழியில் பதிலளிக்கும் விதம் குறித்த முக்கிய இணைப்பைக் கூறுகிறது. குடல் நுண்ணுயிர்கள் செரிமானத்துக்கு மட்டும் வழிவகுக்கவில்லை, உடல் வளர்சிதைக்கும் மட்டும் உதவவில்லை, இது மனஅழுத்தத்தில் முக்கிய பங்கை வக்கிக்கிறது. இந்த முறை குறிப்பிட்ட சிர்கார்டியன் ரிதத்தை பின்பற்றுகிறது. இதனால் நீங்கள் உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிர்களை முறையாக பராமரிக்க வலியுறுத்துகிறது. இன்றைய மனஅழுத்தம் நிறைந்த காலத்தில் வாழ்க்கூடியவர்களுக்கு இது மிகவும் முக்கியம் என்று இந்த ஆய்வு கோடிட்டு காட்டுகிறது.

இந்த நுண்ணுயிர்கள் ஒரு நாளில் எவ்வாறு மாறுகின்றன என்று, மற்றொரு ஆராய்ச்சியாளர் காபிரியேல் டோஃபானி விளக்குகிறார். நாள் முழுவதும் மனஅழுத்தத்தை கையாள குடல் பாக்டீரியாக்கள் எவ்வாறு உதவுகின்றன என்றும் கூறுகிறார். எனவே எதிர்காலத்தில் உளவியல் சிகிச்சைகளுக்கு குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முடியும். நம்மை சுற்றி நடப்பவற்றுக்கு பதிலளிக்க எந்த நுண்ணுயிர்கள் உதவுகின்றன என்றும் அவர் விளக்குகிறார். எனவே குடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் கூட என்று இந்த ஆய்வு அடித்துக்கூறுகிறது. எனவே குடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து, மனஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.