தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Vegetarian Kola Urundai

Chettinad Cuisine: செட்டிநாடு ருசியான சைவ கோலா உருண்டை

I Jayachandran HT Tamil
Feb 02, 2023 12:55 PM IST

செட்டிநாடு ருசியான சைவ கோலா உருண்டை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

செட்டிநாடு ருசியான சைவ கோலா உருண்டை
செட்டிநாடு ருசியான சைவ கோலா உருண்டை

ட்ரெண்டிங் செய்திகள்

சோயா மீல் மேக்கர் கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம். ஈஸி ரெசிப்பி.

இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம். சைவ கோலா உருண்டையை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம்.

இந்த சைவ கோலா உருண்டையைச் செய்ய ஊறவைத்து, அரைக்க, பொரிக்க என இரண்டு பக்குவத்தை கையாண்டால் போதுமானது.

உங்கள் சுவை அரும்புகளை உற்சாகப்படுத்த இதோ செய்முறை

அரைக்க:

சோயா- மீல்மேக்கர் -1 கோப்பை

பச்சை மிளகாய்-4

தேங்காய்-1/4 கோப்பை

பூண்டு-4 பல்

இஞ்சி-2 அங்குலம்

சோம்பு-1/2 தேக்கரண்டி

சீரகம்-1/2 தேக்கரண்டி

மிளகு-4

பட்டை,கிராம்பு,ஏலக்காய் அல்லது கரம் மசாலா பொடி-1/2 தேக்கரண்டி

பொட்டு கடலை-1/4 கோப்பை

முந்திரி பருப்பு-6

உப்பு-1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை-1 கைப்பிடி

சைவ கோலா உருண்டை செய்முறை:

மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முதலில் மசாலா பொருட்களை, மீல் மேக்கர் தவிர்த்து இதர பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த மீள் மேக்கேரை நன்கு பிழிந்து இந்த மசாலா உடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். இப்போது கலவை ரெடி.

கைகளில் எண்ணெய்தொட்டு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

வெடிப்பு இல்லாமல் நல்ல வழு, வழுப்பாக உருட்டவும் இல்லாவிடில் எண்ணெயில் கரைந்து விட வாய்ப்பு உள்ளது.

கடாயில் எண்ணெய் காயவைத்து, காய்ந்த எண்ணெயில் நிதானமான தீயில் பொன்னிறமாக பொறித்தேடுக்கவும்.

சுவையான சைவ கோலா உருண்டை ரெடி

குறிப்பு:

மீல் மேக்கர் தவிர்த்து, மற்ற அனைத்து மசாலா பொருட்களையும் வதக்கி ஆறவைத்தும் அரைக்கலாம். மிக எளிய முறையில் செய்வதற்கான முறையே மேலே கூறப்பட்டுள்ளது

WhatsApp channel

டாபிக்ஸ்