Sugar Free Side Effect: உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம்..! சுகர் ஃப்ரீ மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் இவைதான்
Sugar Free Side Effect: உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு தீமைகளை தருவதாக சுகர் ஃப்ரீ மாத்திரைகள் இருக்கின்றன. சர்க்கரையை விட ஆபத்து மிக்கதாக சுகர் ஃப்ரீ மாத்திரைகள் இருக்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும் இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆராய்ச்சிகளின் படி, செயற்கை இனிப்பு செரிமான அமைப்பு மற்றும் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, ஒருவரது பசியின்மை பாதிக்கப்படுகிறது.
செயற்கை சர்க்கரை அல்லது சுகர் ஃப்ரீயால் வரும் பக்க விளைவுகள்
உடல் ஆரோக்கியத்தில் சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை, ஆரோக்கிய தீமைகள் காரணமாக ஃபிட்னெஸ் பிரியர்கள், செயற்கை இனிப்புகள் அல்லது சுகர் ஃப்ரீ மாத்திரைகளை டயட்டில் சேர்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்த மாற்றத்தினால் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், தங்களின் உடல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் என்று பலரும் நம்புவதுடன். நீங்கள் இதுவரை டீ, காபியில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை மற்றும் செயற்கை இனிப்புகளை பயன்படுத்தினால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
உலகில் சுமார் 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான நோயில், இன்சுலின் அளவு சமநிலையற்றதாகிறது. உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில், இயற்கையான அல்லது எந்தவொரு செயற்கை இனிப்பானையும் உணவுப் பொருள்களில் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
இயற்கையான பழ இனிப்பு உடல் எடையைக் குறைத்தல், உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைத்தல் என அதிக நன்மை பயக்கும். அதேசமயம் கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, செயற்கை இனிப்புகள் செரிமான அமைப்பு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ஒரு நபரின் பசியின்மை பாதிக்கப்படுகிறது.
மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் அவ்வாறு செய்யும்போது, அதன் அதிகப்படியான நுகர்வு உடல் பருமன் மற்றும் இதய நோய்களை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது பலருக்கும் தெரிவதில்லை.
செயற்கை இனிப்புகள் கலோரிகளில் குறைவாக இருக்கலாம், ஆனால் அவை ஆரோக்கியத்துக்கு ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கல்லீரலையும் பலவீனப்படுத்துகிறது.
செயற்கை இனிப்பு மற்றும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உடல் பருமன்
நிபுணர்களின் கூற்றுப்படி, செயற்கை இனிப்புகளை உட்கொள்ளும்போது, ஒரு நபரின் மூளையில் குறைந்த கலோரிகள் உள்ளன என்ற செய்தியைப் பெறுகிறது. இதன் காரணமாக அந்த நபர் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளத் தொடங்குகிறார்.
ஆனால் செயற்கை இனிப்பு உங்கள் பசியை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது. சுகர் ஃப்ரீ ஸ்லிம் ஆவதற்கு உதவாது. இது வளர்சிதை மாற்றம் மற்றும் பசியின்மை மீது எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது.
உயர் ரத்த அழுத்தம்
சுகர் ஃப்ரீ மாத்திரைகள் இதய ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். செயற்கை இனிப்புகளால் செய்யப்பட்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும்.
ஒவ்வாமை
செயற்கை இனிப்பானில் உள்ள அஸ்பார்டேம் அதிக வெப்பநிலையில் ஃபார்மிக் அமிலமாக உடைய தொடங்குகிறது. இதன் காரணமாக ஒரு நபர் ஒவ்வாமை பிரச்னைகளால் பாதிக்கப்படலாம்.
தலைவலி, குமட்டல், மூட்டு வலி, தூக்கமின்மை, பதட்டம் போன்றவை. அதன் சில பக்கவிளைவுகள் சிலரிடம் காணப்படும்.
நிபுணர்களின் ஆலோசனை
சர்க்கரை இல்லாத இனிப்புகள் மற்றும் மாத்திரைகள் மிதமாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, ஆனால் உங்கள் உணவில் புதிதாக எதையும் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்