தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tasty Tomato Thokku Recipe

Tomato Thokku : சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும்.. தக்காளி தொக்கு எப்படி செய்வது? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Divya Sekar HT Tamil
Mar 28, 2024 10:55 AM IST

Tomato Thokku Recipe : மிகவும் சுவையான, ஆரோக்கியமான தக்காளி தொக்கு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

 தக்காளி தொக்கு எப்படி செய்வது
தக்காளி தொக்கு எப்படி செய்வது

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி 10

உப்பு (1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் 1 மற்றும் 1/2 டீஸ்பூன

புளி (சிறிய நெல்லிக்காய் அளவு)

வெல்லம் சிறிய துண்டு

எண்ணெய் 3 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

ஜீரா 1/2 டீஸ்பூன்

வெங்காயம் 1

சிவப்பு மிளகாய் 2

கறிவேப்பிலை

செய்முறை

இந்த ஒரு தக்காளி தொக்கு வைத்து பல வித்தைகளை காட்டலாம் 15 நாட்கள் வரை தாங்கும் இந்த தக்காளி தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு பிரஷர் குக்கரில் 10 பல் பூண்டு, நன்கு பழுத்த தக்காளி பழம் 10, உப்பு மிளகாய்த்தூள், நெல்லிக்காய் சைஸ் புளியை எடுத்து கரைத்து அந்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள் ,சிறிது வெல்லம் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விடுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் நறுக்கி வைத்த வெங்காயம், இரண்டு வரமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது நாம் பிரஷர் குக்கரில் வைத்த தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்துக் கொள்ள வேண்டும் அந்த அரைத்த பேஸ்ட்டை கடாயில் நாம் வதக்கி வைத்த வெங்காயத்துடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும். அதாவது தொக்கு பதத்திற்கு வரும் வரை சிம்மில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.

இந்த தக்காளி தொக்கை நாம் தோசை சாதம் இட்லி பிரட் ரோல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் அதேபோல இந்த தக்காளி தொக்கு செய்யும் போது எண்ணெய் அதிகமாக வைத்து சமைக்கலாம்.

இந்த தக்காளி தொக்கை நாம் தோசை ,சாதம், இட்லி, பிரட் ரோல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதேபோல இந்த தக்காளி தொக்கு செய்யும் போது எண்ணெய் அதிகமாக வைத்து சமைக்கும் போது 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த செய்முறையை பயன்படுத்தி நீங்கள் தக்காளி தொக்கு செய்தால் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். இதனை வீட்டில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்