Tomato-Garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato-garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!

Tomato-Garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 07:00 AM IST

Tomato-Garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!

Tomato-Garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!
Tomato-Garlic Thokku : ஒரு வாரம் கெடாது! இட்லி-தோசைக்கு சுவையான தக்காளி தொக்கு! இப்டி செஞ்சு பாருங்க!

இஞ்சி – அரை ஸ்பூன்

புளி – ஒரு ஸ்பூன்

பூண்டு பற்கள் – 4

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

சாம்பார் பொடி – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

செய்முறை

தக்காளியை கழுவி நறுக்கிக் கொள்ளவேண்டும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து லேசாக வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும்.

பின் புளியை சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவேண்டும். தக்காளி வெந்து கொண்டிருக்கும்போது அதிலுள்ள தண்ணீர் மெல்ல பிரிய ஆரம்பிக்கும்.

தக்காளி பதமாக வெந்ததும் அடுப்பை அணைத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த தக்காளி கலவையை அந்த தண்ணீரோடு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

பின் சாம்பார் பொடி மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.

சுவையான தக்காளி தொக்கு தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

மிக எளிதாக செய்யக்கூடியது இந்த தக்காளி தொக்கு. இதை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வெளியூர் செல்லும்போது இதை செய்து வைத்துக்கொள்ளலாம்.

தக்காளி நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம். 

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.