MUTTON LIVER VS CHICKEN LIVER: மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரியுமா?-mutton liver vs chicken liver which is better nutritional benefits and recommended intake - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Liver Vs Chicken Liver: மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரியுமா?

MUTTON LIVER VS CHICKEN LIVER: மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Aug 24, 2024 09:37 PM IST

Mutton Liver vs Chicken Liver: தண்ணீரில் கரையக்கூடிய தன்மையை வைட்டமின் பி12 கொண்டு உள்ளதால் எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் மீதி உள்ளது சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் என்பதால் அதிக அளவிலான சத்துக்கள் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தாது.

MUTTON LIVER VS CHICKEN LIVER: மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரியுமா?
MUTTON LIVER VS CHICKEN LIVER: மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? எது பெஸ்ட்! எது சாப்பிட்டால் சத்து அதிகம் தெரியுமா?

மட்டன் ஈரல் 

100 கிராம் எடை உள்ள மட்டன் ஈரல் எனப்படும் ஆட்டு ஈரலில் 160 முதல் 170 கலோரிகள் உள்ளன. 20 முதல் 25 கிராம் வரையிலான புரோட்டீன், 5 கிராம் வரையிலான கொழுப்பு சத்து, 400 முதல் 500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 2 முட்டை சாப்பிடும் அளவுக்கான கொலஸ்ட்ரால் ஈரலில் உள்ளது. 

சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் மட்டன் ஈரலில் 6 ஆயிரம் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் பி12 சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் மட்டன் ஈரலில் 85 மைக்ரோ கிராம் உள்ளது. இது ஒருநாள் தேவையை விட 30 மடங்கு கூடுதலாக வைட்டமின் பி 12 உள்ளது.  

வைட்டமின் பி12 சத்து உங்கள் உடலில் குறைந்தால்   நியுரோபதி என கூறப்படும் நரம்புசார் நோய்கள், தீவிர ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னை ஏற்படும். பெரும்பாலான சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இந்த வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளது.  

சிக்கன் ஈரல் 

100 கிராம் எடை உள்ள சிக்கன் ஈரல் எனப்படும் ஆட்டு ஈரலில் 160 முதல் 170 கலோரிகள் உள்ளன. 20 முதல் 25 கிராம் வரையிலான புரோட்டீன், 5 கிராம் வரையிலான கொழுப்பு சத்து, 400 முதல் 500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 2 முட்டை சாப்பிடும் அளவுக்கான கொலஸ்ட்ரால் ஈரலில் உள்ளது.

சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் சிக்கன் ஈரலில் 16 ஆயிரம் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ஏ சத்துக்களை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

வைட்டமின் சத்துக்களின் தன்மைகள் என்ன?

வைட்டமின் பி12 சத்துக்களை பொறுத்தவரை 100 கிராம் சிக்கன் ஈரலில் 16 மைக்ரோ கிராம் உள்ளது.  இந்த வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய தன்மை கொண்டது.  வைட்டமின் பி 12 ஆனது தண்ணீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. 

தண்ணீரில் கரையக்கூடிய தன்மையை வைட்டமின் பி12 கொண்டு உள்ளதால் எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் மீதி உள்ளது சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் என்பதால் அதிக அளவிலான சத்துக்கள் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தாது. 

ஆனால் வைட்டமின் ஏ ஆனது உடலில் உள்ள கொழுப்புகள் உடன் சேர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது. நமது மூளை ஒரு கொழுப்பு பிண்டம் என அழைக்கப்படுகின்றது. அங்கு இந்த வைட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் சென்று சேர்ந்தால் HYPERVITAMINOSIS A  போன்ற மூளை சம்பந்தமான பாதிப்புகளோ அல்லது நமது ஈரலில் இந்த  சத்துக்கள் அதிகப்படியாக சேர்ந்தால் ஈரல் சார்ந்த பிரச்னைகள் வரலாம். 

குழந்தைகளை பொறுத்தவரை வாரத்தில் ஒரு நாள் மட்டன் அல்லது சிக்கன் ஈரல்களை 50 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். சத்துக்குறைபாடுகள் இருந்த குழந்தைகளுக்கு 50 கிராம் ஈரல்களை வாரத்திற்கு இரண்டு முறை உட்கொள்ளலாம். 

பெரியவர்களை பொறுத்தவரை வாரம் ஒரு முறை 100 முதல் 200 கிராம் வரையிலான சிக்கன் அல்லது மட்டன் ஈரல்களை எடுத்துக் கொள்ளலாம்.

 RETINOL  வடிவில் வைட்டமின் ஏ இருக்கும் என்பதால் கர்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களில் அதிக அளவில் இதனை எடுத்துக் கொள்ளும் போது குழதை பிறவி குறைப்பாட்டு உடன் பிறக்கும். இதனால் கர்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களில் வாரம் ஒரு முறை 50 கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். முதல் மூன்று மாதங்களை தாண்டி விட்டால் 100 கிராம் அளவுக்கு ஈரல்களை எடுத்துக் கொள்ளலாம். 

வைட்டமின் பி 12 சத்து தேவைப்படுவோர்கள் சிக்கன் ஈரல்களையும், வைட்டமின் ஏ சத்து தேவைபடுவோர் மட்டன் ஈரல்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.