தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Chunks Gravy : சப்பாத்திக்கு குருமா செய்து போர் அடிச்சிருச்சா? இனி கவலை வேண்டாம்.. சோயா கிரேவி செய்து பாருங்க!

Soya Chunks Gravy : சப்பாத்திக்கு குருமா செய்து போர் அடிச்சிருச்சா? இனி கவலை வேண்டாம்.. சோயா கிரேவி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
Jul 09, 2023 12:31 PM IST

சப்பாத்திக்கு இனி சோயா கிரேவி செய்து பாருங்க. அதுவும் இந்த மாதிரி செய்து பாருங்க. அப்புறம் விடமாட்டீங்க.

 சோயா கிரேவி
சோயா கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய்

கிராம்பு (3)

பிடியாணி இலை (1)

பெருஞ்சீரகம் (1/2 தேக்கரண்டி)

இலவங்கப்பட்டை (1)

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

1 தேக்கரண்டி கரம் மசாலா

1/4 கப் தயிர்

தேவையான அளவு உப்பு

செய்முறை

1/2 கப் சோயா துண்டுகளை எடுத்து, சோயா நன்கு வேகும் வரை 10 நிமிடம் உப்பு சேர்த்து வெந்நீரில் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை அழுத்தி தண்ணீர் பிழிந்து எடுத்து ஒதுக்கி வைக்கவும். பின்னர் ஒரு கடாயில், 2 டீஸ்பூன் எண்ணெய், கிராம்பு (3), பிரியாணி இலை (1), பெருஞ்சீரகம் (1/2 தேக்கரண்டி), இலவங்கப்பட்டை (1) சேர்க்கவும்.

மெல்லியதாக நறுக்கிய 2 வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து (1), மென்மையாகும் வரை வதக்கவும். 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 1/4 கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை வாசனை போய் எண்ணெய் வெளியேறும் வரை வதக்கவும்.

பின்னர் 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எடுத்து வைத்த சோயா துண்டுகளை சேர்த்து கலக்கவும். அதிகப்படியான நீர் ஆவியாகும் வரை சில நொடிகள் கொதிக்க விடவும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும். சாப்பாத்திக்கு இது மிகவும் ருசியாக இருக்கும். இதனை வீட்டில் ஒருமுறை சமைத்து கொடுங்கள்.அனைவருக்கு பிடிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்