தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Lotus Seed Gravy : வித்தியாசமான சுவையில் தாமரை விதை கிரேவி செய்யலாம்.. ஈஸி டிப்ஸ் இதோ!

Lotus Seed Gravy : வித்தியாசமான சுவையில் தாமரை விதை கிரேவி செய்யலாம்.. ஈஸி டிப்ஸ் இதோ!

Divya Sekar HT Tamil
Aug 06, 2023 01:32 PM IST

தாமரை விதை கிரேவி எப்படி செய்யலாம் என்பது குறித்து இதில் காண்போம்.

தாமரை விதை கிரேவி
தாமரை விதை கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

பிரியாணி இலை - 2

நறுக்கப்பட்ட வெங்காயம்

தக்காளி - 1

முந்திரி - 5 முதல் 10 வரை

இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு

இஞ்சி பூண்டு விழுது

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

தயிர் - 1 கப்

உப்பு

நீர்

செய்முறை

முதலில் கடாயில் சிறிது எண்ணெயில் ஊற்றி தாமரை விதைகளை போட்டு மிருதுவாகும் வரை வறுக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி, முந்திரி, கரம் மசாலா, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு, இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.

கடாயில் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலா தூள்களுடன் உப்பு சேர்க்கவும்.

கிரேவி நிலைத்தன்மைக்கு தயிர், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் சமைக்கவும். குழம்பு கெட்டியானதும் வறுத்த தாமரை விதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான தாமரை விதை கிரேவி ரெடி.

நன்றி : pravz kitchen

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்