தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Digestive Juice Panakam

Healthy Food: செரிமானத்தைத் தூண்டும் உகந்த பானகம்

I Jayachandran HT Tamil
Feb 02, 2023 01:22 PM IST

நல்லதொரு விருந்துக்குப் பின் அருந்த வேண்டிய செரிமானத்தைத் தூண்டும் உகந்த பானகம் செய்முறை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

செரிமானத்தைத் தூண்டும் பானகம்
செரிமானத்தைத் தூண்டும் பானகம்

ட்ரெண்டிங் செய்திகள்

பானகம் செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கும் , மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்பது நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்ட உண்மை. சிறு கவனம் பெரிய நன்மை அருமை புரிந்து நம் சந்ததியினருக்கு உணர்த்துவோம். பானகம் லெமனேடுக்கு மற்றுமோர் பெயர் எனலாம்.

பானகம் செய்யத்தேவையான பொருட்கள்:

எலுமிச்சை -1 (சாறு எடுத்துக்கொள்ளவும்)

வெல்லம் பொடிதத்து-3 மேஜைக்கரண்டி

சுக்கு தூள்-1/4 தேக்கரண்டி

ஏலக்காய்த்தூள் -1/4 தேக்கரண்டி

தண்ணீர் 2 கோப்பை (400மில்லி )

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடி தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்,(வெல்லத்தில் சிறிது உப்பு சுவை இருப்பதால் மேலும் நாம் உப்பு சேர்க்கத்தேவையில்லை)

அதில் எலுமிச்சை சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும் வடிகட்டத்தேவையில்லை அப்படியே பரிமாறலாம்.

செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கு, மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்ப நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்