தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread: பிரட் கடையில வாங்குறீங்களா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்

Bread: பிரட் கடையில வாங்குறீங்களா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்

Aarthi V HT Tamil
Sep 01, 2023 11:40 AM IST

பிரட் வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என பார்க்கலாம்.

பிரட்
பிரட்

ட்ரெண்டிங் செய்திகள்

சூடான பால் - 80 மில்லி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

ஈஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி

மைதா மாவு - கால் கிலோ

பால் பவுடர் - கால் கப்

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். சர்க்கரை கரைந்த பிறகு, ஈஸ்ட் சேர்த்து கலக்கவும். அதை மூடி 10 நிமிடம் வைக்கவும்.
  • பின்னர் அதில் மைதா மாவு, பால் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட மென்மையாக கலக்கவும். எண்ணெய் தடவிய பின் கைகளில் ஒட்டாமல் கலக்கவும். இப்படி 4 முதல் 5 நிமிடம் கலந்து மூடி வைத்து ஒன்றரை மணி நேரம் வைக்கவும்.
  • இப்போது இந்தக் கலவையை கையால் பிசையவும். பின் உருட்டி நீளமான பேக்கிங் ட்ரேயில் வைக்கவும். மாவு தட்டு நன்றாக பேக் செய்யப்பட வேண்டும்.
  • பின்னர் அதை மூடி அடுத்து ஒரு மணி நேரம் வைக்கவும். இப்போது கொதிக்கவைத்து ஆறிய பாலை அதன் மீது பிரஷ் மூலம் தடவவும்.
  • இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில் ஒரு கப் உப்பு அல்லது மணலை வைக்கவும். அதில் ஒரு ஸ்டாண்டை வைத்து மூடி வைத்து 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்யவும்.
  • அதில் பிரெட் ட்ரேயை வைத்து மூடி வைத்து மிதமான தீயில் 30 முதல் 35 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும். இப்போது ட்ரேயை வெளியே எடுத்து சிறிது ஆறவிடவும்.
  • முழுவதுமாக ஆறிய பிறகு தேவையான அளவு துண்டுகளாக ரொட்டியை வெட்ட வேண்டும்.
  • ரொட்டியை வெளியில் வாங்காமல் வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்