தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vegan Diet: சத்தோ சத்து.. பாதியிலேயே வீகன் டயட்டை விடத்தோணுதா? - அப்ப உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!

Vegan Diet: சத்தோ சத்து.. பாதியிலேயே வீகன் டயட்டை விடத்தோணுதா? - அப்ப உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 13, 2023 10:30 AM IST

உங்களது வீகன் டயட்டை தொடர்ச்சியாக கைகொள்ள நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ்கள்!

வீகன் டயட்!
வீகன் டயட்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகமான சத்துக்கொண்டதாகவும், செரிமானத்திற்கு எளிதாகவும் இருப்பதால் இந்த டயட்டை மருத்துவர்களும் மக்களுக்கு பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இந்த டயட்டை தொடர்ந்து கைகொள்வது என்பது கடினமான காரியம். காரணம் நம்மைச் சுற்றி, நம் நாக்கிற்கு மட்டுமே சுவை தரக்கூடிய ஏராளமான பதப்படுத்தப்பட்ட உணவுகள் நிரம்பி வழிகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதனை கைகொள்ள தேவையான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

பால் சம்பந்தமான உணவு வகைகள் மற்றும் மாமிச உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வார இறுதி நாட்களிலேயே அடுத்த வாரம் எந்தெந்த நாட்களில்,என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள போகிறோம் என்பதை பட்டியல் போட்டு விடுங்கள்.

இந்தப்பட்டியலில் தாவர வகைகளில் இருந்து கிடைக்கும் பால், பழங்கள், காய்கறிகள், விதைகள் என அனைத்தும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஷாப்பிங் செல்லுபோதே என்னென்ன வகையான காய்கறிகள், பழங்கள் தேவை என்பதை முன்னதாக எழுதி வைத்து செல்லுங்கள். இது தேவையில்லாமல் நாம் இதர உணவு பொருட்களை வாங்குவதை தவிர்க்க செய்யும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

உங்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உங்களது உணவில் இருக்கிறதா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்களே சமைக்க ஆரம்பியுங்கள்

நட்ஸ், கடலைவகைகள், தானியவகைகள் உள்ளிட்டவற்றை முன்னமே வாங்கி ஸ்டோர் செய்ய மறவாதீர்கள்

உங்களுக்கு இந்த வீகன் டயட் கடினமாக இருந்தால் உடனே ஊட்டச்சத்து நிபுணரை அணுகுங்கள்!

WhatsApp channel

டாபிக்ஸ்