Relationship Tips: ரிலேஷன்ஷிப்க்குள்ள ரொமான்ஸ் அதிகரிக்க இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்! என்ன தெரியுமா ?
Relationship Tips: தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து மனித உறவுகளும் வெவ்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது. இத்தகைய உறவுகளில் சிக்கல்களும் அதிகரித்துள்ளன.
வேலை, பொருளாதாரம் ஆகிய காரணிகளுக்காக பெரும்பாலானோர் தங்களது குடும்பங்களை விட்டு தனியாக வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொழில் நுட்ப உதவியுடன் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எளிமையான ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து மனித உறவுகளும் வெவ்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது. இத்தகைய உறவுகளில் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. எனவே மாறி வரும் உறவுகளில் ஒவ்வொருவரும் பல சிக்கல்களை தீர்க்க வேண்டியதாகி உள்ளது. அத்தகைய சிக்கல்களை தீர்க்க சில வழிமுறைகள் இதோ.
உறவின் வலிமை
காதலர்கள், திருமணம் ஆனவர்கள் என அனைவரும் அவர்களது உறவின் வலிமை குறித்து தெளிவான புரிதலோடு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அவர்களது பார்ட்னர்களின் மன நிலையை அறிந்து செயல்பட வேண்டும். முடிந்த அளவு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு வரும் போது அவர்களாகவே பேசி முடிக்க வேண்டும். உறவில் சம உரிமையோடு பழக வேண்டும். யாரும் ஆதிக்கம்(Dominate) செலுத்த கூடாது. ஒருவர் வேலை சம்பந்தமாகவோ, வேறு ஏதோ காரணங்களுக்காகவோ பிஸியாக இருந்தால் அதனை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
வீண் காரணங்களுக்காக வாக்கு வாதத்தில் ஈடுபட கூடாது. மற்ற நபர்களால் இருவருக்கும் இடையில் பிரச்சனை வர விடக் கூடாது. குறிப்பாக உறவின் மதிப்பை அறிந்து இருக்க வேண்டும். அந்த மதிப்பு குறையாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். கோபமான நேரங்களில் பேசுவதை தவிர்க்கலாம். இல்லையென்றால் கோபத்துடன் இருப்பவர் கூறுவதை, அமைதியாக கேட்டு பதில் அளக்கலாம்.
பொருளாதார நெருக்கடி
இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், பொருளாதார நெருக்கடி சமயங்களை சுலபமாக சமாளித்து விடலாம். ஒருவர் மட்டும் வேலைக்கு போகும் வீடுகளில் பல பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். இதனை சமாளிக்க வீண் பொருட்களில் பணத்தை செலவழிக்க கூடாது. வீட்டிற்கு தேவையானவற்றை மட்டும் வாங்கி உபயோக படுத்த வேண்டும். அதிக பணம் வேண்டும் என இணையரை நிர்பந்திக்க கூடாது.
பொருளாதாரம் என்பது தேவைக்கு மட்டுமே வேண்டும். ஆடம்பரமாக இருக்கத் தேவையில்லை. எனவே இருவரும் சேர்ந்து யோசித்து மீதம் உள்ள பணத்தை சேமிப்பில் போட வேண்டும். இது மாதிரியான நெருக்கடிகள் வரும் வேளையில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
காதலிக்க நேரம் வேண்டும்
காதலர்கள் அல்லது திருமணம் ஆனவர்கள் என யாராக இருந்தாலும், காதலிக்க நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து பொறுமையாக உரையாட வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால் இந்த உரையாடலின் போது சொல்லி விட வேண்டும். இது முழுக்க ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நடக்கும் உரையாடலாக மட்டுமே இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் வாக்கு வாதமாக மாறாமல் பார்த்தக கொள்ள வேண்டும்.
காலை நேரத்தில் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொள்வது, இருவரும் சேர்ந்து சமைப்பது, போன்ற செயல்கள் ரொமான்ஸ் அதிகரிக்க ஒரு பாலமாக அமையும். தங்கள் பார்ட்னரின் காதல் மொழியை(Love Language) அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல நடந்து கொள்ளும் போது காதல் அதிகரிக்கும்.
டாபிக்ஸ்