Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!-happy valentines day the day that lovers of the world have been waiting for has arrived say your greetings like this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!

Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!

Priyadarshini R HT Tamil
Feb 14, 2024 06:00 AM IST

Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!

Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!
Happy Valentine's Day : உலக காதலர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது! இப்படி சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களை!

தொடர்ந்து சாக்லேட் தினம் பிப்ரவரி 9ம் தேதி கொண்டாடப்பட்டது. அடுத்து பிப்ரவர் 10ம் தேதி டெடி டே கொண்டாடப்பட்டது. பின்னர் வந்தது ப்ராமிஸ் டே எனப்படும் வாக்குறுதி நாள், பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்பட்டது. ஹக் டே பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்பட்டது.

காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளும், ரோஜா, டெடி என பரிசுகளும், வாக்குறுதிகள் மற்றும் காதலை கூறியும் காதலர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காதலர்களுக்கு சிறப்பு குறிப்புகளுடன் அன்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காதலர் வாரத்தில் நேற்று கிஸ் டே அதாவது முத்த தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்று காதலர்கள் ஆவலோடு எதிர்பார்த்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலை மொழிந்து, பரிசுகளாலும், அணைப்புகளாலும், முத்தங்களாலும் நிறைத்த உங்கள் காதலன் அல்லது காதலிக்கு பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினத்தில் எவ்வாறு வாழ்த்தலாம்?

அவர்களுக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.

உங்கள் காதலின் ஆழத்தை, அன்பின் ஆற்றலை உணர்த்த, வார்த்தைகளின்றி தவிக்கிறீர்களா? உங்களுக்காக உங்கள் உணர்வுகளை பிரிதிபலிக்கும் வகையில் இதோ உங்களுக்கு எவ்வாறு வாழ்த்துவது என்று உங்களுக்கு குறிப்புகளை கொடுக்கிறோம்.

காதலர் தினம் ஆண்டில் ஒரு நாள் மட்டும் வருவது. ஆனால் உனக்கு தெரியவேண்டும் நான் உன்னை தினமும், ஒவ்வொரு நொடியும் விரும்புகிறேன் என்று, இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

சிறந்த காதல் என்பது, உங்கள் ஆன்மாவை விழிப்படையச் செய்வது, நம்மை இன்னும் அதிக தூரங்களை அடையச்செய்வது, அது நமது இதயத்தில் தீயை மூட்டும், நமது மனதில் அமைதியை கொண்டுவரும். நீயும் எனக்கு அதைத்தான் தந்திருக்கிறாய். நானும் உனக்கு அதை கொடுப்பேன் என்று நம்புகிறேன். – நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்.

நான் உன்னை சந்தித்தேன், உன்னை விரும்பினேன், உன்னை காதலிக்கிறேன். உன்னை என் காதலாக வைத்திருக்கிறேன் எப்போதும், இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

நீ தான் என்றும் எனக்காக இருப்பாய் என்பதை நான் எப்படி தெரிந்துகொண்டேன்? நீங்கள் தான் எனது மோசமான காலங்களிலும் என்னை சிரிக்க வைக்கும் ஒரே நபர், நீங்கள் இல்லாத ஒரு நாளை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஹாப்பி வாலண்டைன் டே!

நட்சத்திரங்கள் எப்போதாவது மரிக்கும்போது, நீயும், நானும் சேர்ந்து காதலின் துணையோடு நமக்கான ஒளியை உருவாக்குவோம் – ஜான் மார்க் கிரீன்.

எனது குழந்தைகளின் தந்தைக்கு, எனது வாழ்வின் காதலுக்கு ஹாப்பி வாலண்டைன்ஸ் டே, எனது வாழ்வின் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நீ. எனது கனவுகளின் காவலன் நீ. இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

எனது பயணமும், முடிவும் நீ, எனது வாழ்க்கை முழுவதிலும் என்னுடைய எமர்ஜென்சி காண்டாக்டாக இருப்பாயா? அன்பே ஹாப்பி வேலண்டைன்ஸ் டே!

மனைவிக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள். உங்கள் இதயம் முழுவதும் காதல் நிரம்பி வழியட்டும். உங்கள் வாய் முழுவதும் சாக்லேட்களால் நிரம்பி வழியட்டும். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நான் உங்களை காதலிக்கவும், கொண்டாடவும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

நீ முட்டாள்த்தனமாக மறந்துவிட்டால், நான் உன்னை நினைக்கவே மாட்டேன் – வர்ஜினியா வுல்ஃப்.

என்னைப்போன்ற விசித்திரமான ஒருவரை சந்தித்தற்கு நான் நன்றி நிறைந்தவளாக இருக்கிறேன். இந்த வாழ்வில் எனக்கு தேவையே நீயும், நானும் மட்டுமே. நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அன்பே ஹாப்பி வாலண்டைன்ஸ் டே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.