Weight Loss Drinks: உடல் எடையை ஈஸியாக குறைக்கணுமா? இத மட்டும் குடிங்க போதும்.
Weight Loss Drinks: உலகளாவிய பெரும் பிரச்சனையாக உடல் பருமன் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க பல டயட் பிளான்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் பின்பற்றும் அளவிற்கு யாருக்கும் சரியான நேரம் கிடைப்பதில்லை.

மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வரும் அதை சூழ்நிலையில் பல ஆபத்தகளும் வளர்ந்து வருகின்றன. இளம் வயதிலேயே இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகரித்து விட்டன. அதிக உடற்பயிற்சிகள் செய்தாலும், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. உலகளாவிய பெரும் பிரச்சனையாக உடல் பருமன் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க பல டயட் பிளான்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் பின்பற்றும் அளவிற்கு யாருக்கும் சரியான நேரம் கிடைப்பதில்லை. இவ்வாறு உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் எளிமையாக, வீட்டிலேயே தயாரிக்கும் பானங்கள் குடிப்பதன் மூலம் பலன் அடையலாம்.
பல்வேறு விதமான உடல் எடை குறைப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டாலும், இந்த பானங்கள் சிறந்த ரிசல்ட்டை தருகின்றன. மேலும் உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்களும் உடல் எடையை அதிகரிக்க விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
கொழுப்பை கரைக்கும் பானங்கள்
வயிற்றில் உள்ள கொழுப்பை முற்றிலும் குறைப்பதே உடல் பருமனை குறைக்கும் செயல்பாட்டில் முதன்மையானதாகும். அதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் குடிக்க வேண்டும். முதலில் இவை மூன்றையும் ஒரு கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடியாக்கி கொள்ள வேண்டும். இதனை சுடு நீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றின் கொழுப்புகள் குறையும்.