தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Low Cost Waxing: 10 ருபாய் செலவில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

Low cost Waxing: 10 ருபாய் செலவில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 10:30 AM IST

10 ருபாய் செலவில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

வீட்டிலேயே வேக்ஸிங்
வீட்டிலேயே வேக்ஸிங்

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுடைய முடி வளர்ச்சியை பொறுத்து 1-2 மாதத்துக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டி இருக்கலாம். இதற்கு பதிலாக இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே வேக்ஸ் செய்து பயன்படுத்த முடியும். ரசாயனங்கள் அற்ற இந்த வேக்ஸ் உங்களுடைய நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். இதற்கான செய்முறையை இப்பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே வேக்ஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சர்க்கரை - 2 கப்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

வேக்ஸ் தயாரிக்கும் முறை

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு அடிகனமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

குறைந்த தீயில் வைத்து இவற்றை நன்றாக கலக்கவும்.

சர்க்கரை உருகி இந்த கலவையின் நிறம் தேன் போல மாறும் வரை காத்திருக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஒரு பாட்டில் அல்லது கிண்ணத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

உங்களுடைய கை அல்லது கால்களில் பவுடர் போட்டுக் கொள்ளவும்.

வேக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக் வைத்து வேக்ஸை தடவவும்.

இப்போது முடி வளர்ச்சி இருக்கும் திசையில் வேக்ஸ் ஸ்ட்ரிப்பை ஒட்டி எடுக்கவும்.

வேக்ஸிங் செய்த பின் நீங்கள் செய்யவேண்டியவை

வேக்சிங் செய்த பிறகு உங்கள் சருமத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் உங்கள் சருமத்துக்கு மாய்ஸ்சரைசர் தடவ மறக்காதீர்கள்.

வேக்சிங் செய்த பிறகு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும். காட்டன் ஆடைகள் அணிவது நல்லது.

வேக்ஸிங் செய்த பிறகு நேரடி சூரிய ஒளியில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.

உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால் வேக்ஸிங் செய்த பிறகு கூடுதல் பராமரிப்பு தேவைப்படலாம்.

முடியின் வளர்ச்சிக்கு ஏற்ப முறையாக வேக்ஸ் தடவுவதும், வேக்ஸ் ஸ்ட்ரிப் பயன்படுத்துவதும் முக்கியம்.

வீட்டில் செய்யப்பட்ட வேக்ஸின் நன்மைகள்

கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் நிறைந்த வேக்ஸ் பயன்படுத்துவதால் ஒரு சிலருக்கு சரும தடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த வேக்ஸை பயன்படுத்தலாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் இந்த வேக்ஸ் பயன்படுத்துவதால் சருமம் வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் இந்த வேக்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்