Best Facials: எந்த முகத்திற்கு எந்த ஃபேசியல் கரெக்ட்? சரியான டிப்ஸ் இங்க!
Best Facials: முகத்தை சிறப்பாக பராமரிக்கும் பணிகளில் ஒன்றுதான் ஃபேசியல் செய்வது. இதன் மூலம் முகத்தின் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன.
முகத்தை சிறப்பாக பராமரிக்கும் பணிகளில் ஒன்றுதான் ஃபேசியல் செய்வது. இதன் மூலம் முகத்தின் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபேசியல் செய்து கொள்வதன் வழியாக முகத்தில் ஏற்படும் நீண்ட கால பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும். முகத்தில் உண்டாகும் பருக்கள், கரும்புள்ளிகள், பெரிய அளவிலான துளைகள் என அனைத்து விதமான குறைபாடுகளையம் கட்டுபடுத்தும் திறன் ஃபேசியல் செய்வதில் இருந்து கிடைக்கும். இருப்பினும் சில சமயங்களில் சில வகை ஃபேசியல்களால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனை தவிர்க்க எந்த ஃபேசியல் எந்த வகை சருமத்திற்கு பொருந்தம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே இந்தியர்களுக்கு சிறந்த சருமம் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தனித்துவம் மிக்க தோல் உடையவர்கள் உள்ளனர். சரும நிறம் வேறுபட்டாலும், ஓரளவு ஒத்துப் போக்கக்கூடிய சரும வகைகள் காணப்படுகின்றன.
பெண்களுக்கான கோல்ட் ஃபேஷியல்
பெண்களின் முகம் அதிக பொலிவுடன் இருக்க கோல்டன் ஃபேசியல் செய்து கொள்ளலாம். இது அதிக ஈரப்பதம் உள்ள முகத்திற்கு நன்றாக பொருந்தும். மேலும் இது கொலாஜனை அதிகரிக்கவும், செல்களை மீளுருவாக்கம் செய்யவும், முகத்தின் கோடுகள் மற்றும் சுருக்கங்களை கட்டுபடுத்தகவும் உதவுகிறது. இது சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது, பக்க விளைவுகள் அல்லது எதிர்வினைகள் என எதுவும் இருப்பதில்லை.
டைமண்ட் ஃபேஷியல்
டைமண்ட் ஃபேஷியல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வைர தூள் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. இது இந்திய சருமத்திற்கான சிறந்த ஃபேஷியல்களில் ஒன்றாகும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. இந்த ஃபேஷியல் வறண்ட மற்றும் எண்ணெய் பிசு பிசுப்பு உள்ள தோல் வகைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேஷியல் தோலின் ஆதரவு திசுக்களை வலுப்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் உருவாவதை தாமதப்படுத்தவும் உதவுகிறது.
கேவியர் ஃபேஷியல்
கேவியர் ஃபேஷியல் மூலம் சருமத்தை கேவியர் மூலம் புத்துயிர் பெற வைக்க முடியும். வறண்ட சருமத்திற்கான நீரேற்றம், ஊட்டச்சத்து மற்றும் பழைய செல்களை அகற்றி புதுப்பித்தல் ஆகியவற்றை அளிக்கிறது. 23 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஃபேஷியல் ஏற்றது. வறண்ட சரும வகைகளுக்கு இந்த ஃபேஷியல் சிறந்தது. சரியான தோல் பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது.
முத்து ஃபேஷியல்
பெர்ல் ஃபேஷியல் இந்திய சருமத்திற்கான சிறந்த ஃபேஷியல்களில் ஒன்றாகும், இது அசுத்தங்களை அகற்றவும் தொல்லைதரும் டானைப் போக்கவும் மென்மையான சருமத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேஷியல் மூலம் சருமம் முத்து போல் ஜொலிக்கும். இந்த ஃபேஷியல் பெண்களின் சாதாரண மற்றும் எண்ணெய் சரும வகைகளுக்கு ஏற்றது.
சில்வர் ஃபேஷியல்
சில்வர் ஃபேஷியல் மூலம் வறண்ட மற்றும் ஈரப்பதம் இல்லா சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்க முடியும். இதில் செய்யப்படும் மசாஜ் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும்! இந்த பெண்களின் ஃபேஷியல் சாதாரண மற்றும் எண்ணெய் சரும வகைகளுக்கு ஏற்றது. இந்த அனைத்து ஃபேஷியல்களும் சரியான சரும வகைகளுக்கு ஏற்றது. முதலில் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து கொண்ட பின் இதனை செய்தல் மிகவும் நல்லது ஆகும்.
டாபிக்ஸ்