தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Be Healthy In A Busy Life : பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

How to be Healthy in a busy Life : பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Dec 27, 2023 01:01 PM IST

How to be Healthy in a Busy Life : உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து செய்வது, இயற்கையுடன் இணைந்த வாழ்வு ஆகியவற்றை செய்து மனஅழுத்தத்தை போக்கிக்கொள்ளுங்கள்.

How to be Healthy in a busy Life : பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?
How to be Healthy in a busy Life : பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து செய்வது, இயற்கையுடன் இணைந்த வாழ்வு ஆகியவற்றை செய்து மனஅழுத்தத்தை போக்கிக்கொள்ளுங்கள்.

இன்றைய நவீன உலகில் நாம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டவனை உள்ளது. அதன்படி ஓடிக்கொண்டடிருக்கிறார்கள். இந்தப்பரபரப்பில்தான் நாம் நமது உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் நலமாக இருக்க முடியும். பரபரப்பான நாளில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உறக்கத்துக்கு முக்கியத்துவம்

இந்த டிஜிட்டல் உலகில் உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் எப்போதும் திரையிலேயே மூழ்கிக்கிடக்கிறோம். எனவே ஆரோக்கியமான உறக்கம் நமக்கு மிகவும் அவசியம். திரைக்கு படுக்கை நேரத்தில் நேரம் கிடையாது என்பதை கட்டாயம் கடைபிடியுங்கள். 

நீங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வரும் ஊதா வெளிச்சத்துக்கு தடைபோடுங்கள். அது உங்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.

மருத்துவ அறிக்கைகளை பராமரியுங்கள்

உங்கள் மருத்துவ அறிக்கைகளை தயாராக வைத்திருங்கள். உங்களுக்கு ஏற்படும் காய்ச்சல், அலர்ஜி, மருந்துகள், நோய் எதிர்ப்பு எடுத்துக்கொண்ட தகவல் என அனைத்தையும் முறையாக பராமரியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு ஏதேனும் திடீரென தேவைப்பட்டால், எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். 

உங்களின் ஆரோக்கிய குறிப்புகளை சரியாக எடுத்துவைத்து பராமரிக்க வேண்டும். இந்த டிஜிட்டல் காலத்தில் அனைத்தையும் டிஜிட்டலான பராமரியுங்கள். இதனால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைப்பதுடன், நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தடுப்பூசிகள் குறித்தும் நினைவுப்படுத்தும். 

எப்போது நீங்கள் நோய் தடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தானாகவே கூறும் வழிவகைகை செய்துவைத்துவிட்டால், அது உங்களுக்கு உதவியாக அமையும்.

நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும்

உங்களின் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி நீங்கள் அன்றாடம எவ்வளவு தண்ணீர் பருகவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்கள் உங்களுக்கு எப்போது எவ்வளவு தண்ணீர் பருகவேண்டும் என்று நினைவூட்டும். அது உங்களின் பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும்.

உங்கள் உணவு குறித்து திட்டமிடுங்கள்

சத்தான உணவு குறித்து உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஆப்களும் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்தி, இன்று என்ன சாப்பிடவேண்டும்? என்ன வாங்கவேண்டும் என அவை அறிவுறுத்திக்கொண்டே இருக்கும். அவற்றை பின்பற்றி நீங்கள் ஒரு நல்ல உணவை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.

மனஅமைதி பழகுங்கள்

இந்த டிஜிட்டல் இரைச்சலுக்கு மத்தியில் மனஅமைதி பழகுங்கள். அதற்கும் உங்களுக்கு சில ஆப்கள் உதவும். அது 5 நிமிட தியானமோ அல்லது மனதை அமைதிப்படுத்தும் ஒரு மெல்லிய இசையோ உங்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க உதவும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கான பழக்கவழக்கங்கள்

உங்களின் பரபரப்பான நாளில் உங்களை அமைதிப்படுத்தும் அல்லது மடைமாற்றும் ஒரு பழக்கவழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இசை, புத்தக வாசிக்க, கைவினைப்பொருள் செய்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பழக்கவழக்கங்கள் உங்களை கிரியேட்வாக மாற்றுகிறது. 

அது உங்களின் அன்றாட அழுத்தங்களில் இருந்து உங்களை விடுவிக்கிறது. பழக்கவழக்கங்கள் உங்களுக்கு மனம் மற்றும் உணர்வு ரீதியிலான மகிழ்ச்சியைக்கொடுக்கிறது. ஓவியம், தோட்டமிடுதல், இசை என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.

இயற்கையுடன் இணைந்திருங்கள்

வெளியே செல்வது, பார்க்கில் அமர்ந்திருப்பது, காடுகளுக்குச் செல்வது என இயற்கையுடன் இணைந்திருங்கள். இயற்கையுடன் நேரம் செலவிடும்போது, நீங்கள் மனஅழுத்தம் இன்றி உணர்கிறீர்கள் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இயற்கைக்கு மனநிலையை இயற்கையாகவே மீட்டெக்கும் சக்தி உள்ளது என்று அவர்கள் கணிக்கிறார்கள். 

எனவே வெளியே இருப்பது உங்களுக்கு ஆற்றலை கொடுக்கிறது. எனவே திரையில் இருந்து விலகியிருங்கள். சுத்தமான காற்றை சுவாசியுங்கள். இயற்கை அதன் மேஜின்னால் உங்கள் உடல்நலனை மேம்படுத்தும்.

WhatsApp channel

டாபிக்ஸ்