தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Horse Gram Soup : சளிக்கு எமன்! மழைக்கு இதமான கொள்ளு சூப் செய்யலாமா? - இதோ ரெசிபி!

Horse Gram Soup : சளிக்கு எமன்! மழைக்கு இதமான கொள்ளு சூப் செய்யலாமா? - இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Sep 15, 2023 12:00 PM IST

Horse Gram Soup : கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப் பாருங்கள். சளி காணாமல் போய் விடும் என்கிறார்கள்.

சளிக்கு இதமான கொள்ளு சூப் செய்வது எப்படி?
சளிக்கு இதமான கொள்ளு சூப் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப் பாருங்கள். சளி காணாமல் போய் விடும் என்கிறார்கள்.

அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும்.

அவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

கொள்ளு சூப் செய்ய தேவையான பொருட்கள்

கொள்ளு – அரை கப் (வறுத்தது)

தண்ணீர் – 3 கப்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

புளிக்கரைசல் – 1 ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

மிளகு, சீரகம் தலா அரை ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து அரைத்ததுக்கொள்ள வேண்டும்.

கொள்ளு பருப்பு வறுத்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து, 8 முதல் 10 விசில் வரை விடவேண்டும். வெந்த பருப்பை தண்ணீரை நீக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை சூடாக்கி, கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கொள்ளு பருப்பு மற்றும் வேகவைத்த தண்ணீரை இரண்மையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

புளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

அரைத்த மிளகு மசாலா சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

குறைவான தீயில் நன்றாக கொதி வந்தவுடன், ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும்.

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூடாக வடித்து எடுத்து அப்படியே பருகினால், சளி முறித்துக்கொண்டு வெளியேறும்.

WhatsApp channel

டாபிக்ஸ்