Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Honey Benefits In Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!

Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
May 10, 2024 04:43 PM IST

Health Benefits of Honey : கோடைக் காலத்தில் தேன் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!
Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!

தேனின் நன்மைகள்

பல மலர்களில் இருந்து தேன் துளிகளை தேனீக்கள் சேகரிக்கின்றன. அதுதான் ஒவ்வொரு வகை தேனுக்கும் தனிச்சுவை மற்றும் தோற்றத்தை கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் தேனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

இதில் நார்ச்சத்துக்கள், கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய அனைத்தும் குறைவாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள தாவர உட்பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரண்டையும் பொருத்து தேன் வெளிர் நிறம் முதல் அடர் நிறம் வரை உள்ளது.

சருமப் பொலிவு

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்கிறது. இதில் உள்ள இயற்கையான நீர்ச்சத்துக்கள் மற்றும் ஈரத்தன்மையும், உங்கள் சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி அதை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

உங்கள் சருமத்தில் தேனை தடவுவதன் மூலம், சரும வறட்சி, சூரியனால் ஏற்படும் வெடிப்புகளை குறைத்து, உங்கள் சருமத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. கடும் வெப்பத்தில் இருந்து உங்களை காக்கிறது.

உறக்கத்தை அதிகரிக்கிறது

நீங்கள் தேனை உட்கொள்ளும்போது, தேன் உங்கள் உடலில் சிறிதளவு இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் மூளையில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலங்களை எளிதாக நுழைக்க உதவுகிறது. டிரிப்டோஃபன்கள் செரோட்டினின்களாகவும், பின்னர் மெலோட்டினின்களாகவும் மாறும். 

இது உறக்கத்தை முறைப்படுத்தும். எனவே உறங்கச்செல்லும் முன் தேனி அருந்திவிட்டுச் செல்வது உங்களை படுக்கை நேரத்தை அமைதியானதாக்கும். கடும் கோடை வெப்பத்தின் தகிப்பிலும் நீங்கள் அமைதியாக உறங்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலில் கோடைக்காலங்களின் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளை எதிர்த்து போராட தேன் உதவும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, உங்கள் உடலின் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. 

இதன் மூலம் பருவகால தொற்றுக்கள் குறைகிறது. குறிப்பாக வெயிலின் தாக்கத்தில் இருந்து குணமாக்குகிறது. தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் வீக்கக்கத்தை குறைக்கவும், புறஊதாக்கதிர்களால் ஏற்படும் செல்களின் சேதத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்களில் இருந்து உங்கள் உடலையும் பாதுகாக்கிறது.

உள்ளுறுப்புக்களுக்கு நீர்ச்சத்து

கோடை காலத்தில் உடலின் உள் உறுப்புக்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, கோடையில் உங்கள் உடலின் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடாமல் காக்கிறது. தேனை தண்ணீரில் கலந்து பருகும்போது, உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட உடலுக்கு ஆற்றலைக்கொடுக்கும் எலக்ட்ரோலைட்களை கொடுக்கிறது. 

இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது. தேனில் இயற்கை சர்க்கரை உள்ளது. கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதை உடல் எளிதாக உறிஞ்சும். உடலுக்கு தேவையான ஆற்றலை விரைந்து வழங்கும். ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் வழங்குகிறது.

உடல் எடை பராமரிக்க உதவுகிறது

குறைவாக எடுக்கும்போது, இது உடல் எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதன் தனித்தன்மை வாய்ந்த கலவை மற்றும் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

உங்களுக்கு சாப்பிடவேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது. எனவே ஆரோக்கிய உணவில் அதிகளவில் தேன் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளில் சேர்ப்பதை தவிர்த்து மற்றபடி வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தொண்டை கரகரப்பை போக்குகிறது

கோடைக் காலத்தில் ஏற்படும் சளி மற்றும் அலர்ஜி போன்றவை தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்தும். அதற்கு தேன் நிவாரணம் தரும். இதன் இதமளிக்கும் தன்மை, தொண்டை எரிச்சலைப்போக்கும். இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

தேனில் உள்ள இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான மற்றும் அதன் தீமைகள் இல்லாத ஒன்று, உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. 

எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் தேனை எடுத்துக்கொண்டால், உங்கள் கோடைக்கால உடற்பயிற்சிகளுக்கு பல்வேறு நற்பலன்களைக் கொடுக்கும்.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வயிறு உப்புசம் மற்றும் செரிமாக கோளாறுகள் கோடைக் காலத்தில் பொதுவாக பிரச்னைகள் ஆகும். ஆனால் தேன் அந்த அறிகுறிகளை அடித்துவிரட்டும். இதன் எண்சைம்கள் செரிமானத்தை அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

கிருமி நாசினி

தேன் இயற்கை கிருமி நாசினியாக செயல்படுகிறது. தேன் தொற்றுகள் மற்றும் கிருமிகளிடம் இருந்து காக்கிறது. தேனில் உள்ள சர்க்கரை, பாக்டீரியாவில் இருந்து நீர்ச்சத்தை எடுத்துக்கொள்கிறது. 

இதனால் அவை உயிர் வாழ முடியாமல் மடியும். தேனில் உள்ள ஆசிட் மற்றும் ஹைட்ரோஜன் பெராக்ஸைடு பாக்டீரியாக்களைக் கொல்லும். எனவே பூச்சிகள் கடித்த இடத்தில் தேனை தடவினால், அது உங்களுக்கு காயங்களை அந்த இடத்தில் ஆறச்செய்து, தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

அலர்ஜியைப் போக்குகிறது

கோடைக்கால அலர்ஜிகளை போக்குவதற்கு தேன் உதவுகிறது. உங்கள் பகுதியில் கிடைக்கும் தேன் பருகினால், அது உள்ளூரில் உள்ள மலர்களின் நன்மைகளைக் கொண்டிருக்கும். உங்கள் பகுதியில் உள்ள மலர்களின் மகரந்தத்தை உங்கள் உடல் பழகிக்கொள்ள உதவும். 

நீங்கள் தேன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இது ஒரு கட்டத்தில் உங்களுக்கு உணர்திறனைக் குறைத்து, உங்கள் உடலை அலர்ஜிகளை கையாள உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.