Weather Update: ’நாளை முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’நாளை முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update: ’நாளை முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Apr 30, 2024 01:57 PM IST

”30.04.2024 முதல் 04.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்”

தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

30.04.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

01.05.2024 முதல் 03.05.2024 வரை மேற்கு தொடர்ச்சி மலை அதன ஒட்டிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

04.05.2024 முதல் 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

30.04.2024 முதல் 04.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

30.04.2024 முதல் 04.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 

30.04.2024 முதல் 04.05.2024 வரை; அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

01.05.2024 முதல் 03.05.2024 வரை, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

30.04.2024 முதல் 04.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-43 செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38-40 செல்சியஸ் கடலோர தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36'-39 செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம் 

30.04.2024 முதல் 04.05 2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 10-50% ஆசுவம், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-60% ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழக மாவட்டங்கள். பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

01.05.2024 முதல் 01.05.2024 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுகபட்ட வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28:29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.