Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு - இன்றைய டாப் சினிமா செய்திகள்-rajinikanth vettaiyan coolie update shriya to act with suriya for first time top cinema news today 29 aug 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2024 08:58 PM IST

Top Cinema News Today: ரஜினிகாந்தின் கூலி, வேட்டையன் அப்டேட் என இரண்டு லட்டு, சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை, மூன்று நடிகர்கள் மீது பாலியல் புகார் வழக்கு என இன்றையா டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு  - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு - இன்றைய டாப் சினிமா செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை 2 ரிலீஸ் அப்டேட், ரஜினியின் கூலி மற்றும் வேட்டையன் பட அப்டேட், சூர்யா, கார்த்தி ஆகியோரின் புதிய படங்கள், அஜித்தின் கார் ட்ரைவிங் விடியோ, நடிகைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் பற்றி விசாரிக்க குழு உள்பட சினிமா செய்திகளின் தொகுப்பு இதோ.

விடுதலை 2 ரிலீஸ் அப்டேட்

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் கதையின் நாயகனாக நடித்த சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

234 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய அஜித்

விடாமுயற்சி படப்பிடிப்பின்போது இடது பக்கம் ஸ்டீரிங் கொண்ட ஆடி காரில் 234கிமீ வேகத்தில் அஜித்குமார் கார் ஓட்டிய விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து அஜித்தின் டிரைவிங் திறமையை சிலாகித்து ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

கூலி படத்தில் நாகார்ஜுனா

லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு

ஜெய் பீம் படப்புகழ் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 148 நாள்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது.

ஜீவா புதிய படம் டைட்டில்

ஜீவா - பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் படத்துக்கு பிளாக் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கேஜி பாலசுப்பிரமணி இயக்குகிறார்.

பாலியல் சீண்டல் குறித்து விசாரிக்க குழு

கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என நடிகர் சங்க பொது செயலாளரும், நடிகருமான விஷால் கூறியுள்ளார்.

சூர்யா படத்தில் ஸ்ரேயா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் சூர்யா 44 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தி்ல் நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். முதல் முறையாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தோனி ரசிகராக நடிக்கும் கார்த்தி

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் புதிய படம் மெய்யழகன். இந்த படத்தில் அவர் கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகராக தோன்றவுள்ளாராம். படத்தை செம்டம்பர் 27ஆம் தேதி படக்குழுவினர் வெளியட திட்டமிட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி படத்தின் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது

மூன்று மலையாள நடிகர்கள் மீது பாலியல் வழக்கு

நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு என மூன்று நடிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

இந்தியன் 2 படக்குழுக்கு எதிராக நோட்டீஸ்

ஓடிடி ரிலீஸில் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்தியன் 2 படக்குழுவுக்கு எதிராக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.