உலக உணவு தினம் 2024: உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உலக உணவு தினம் 2024: உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்

உலக உணவு தினம் 2024: உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்

Marimuthu M HT Tamil
Oct 16, 2024 01:51 AM IST

உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.

 உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்
உலக உணவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்த அறிந்ததும் அறியாததுமான தகவல்கள் (Unsplash)

உலக உணவு தினம் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் சரியான ஊட்டச்சத்து மற்றும் சரியான உணவு கிடைப்பதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பசியை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை உலக உணவு தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், உலக உணவு தினம் பல புதிய முயற்சிகள் மற்றும் நிறுவனங்களின் புதிய யோசனைகளுடன் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு தினம் என்னும் சிறப்பு நாளைக் கொண்டாட நாம் தயாராகி வரும் நிலையில், அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

உலக உணவு தினம்:

ஒவ்வொரு ஆண்டும், உலக உணவு தினம் அக்டோபர் 16அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக உணவு தினம் தமிழ் காலண்டர்படி, புரட்டாசி 30ஆம் தேதி, புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

உலக உணவு தினத்தின் வரலாறு:

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 1945ஆம் ஆண்டு மீண்டும் நிறுவப்பட்டது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, 1979ஆம் ஆண்டில், உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO - Food and Agriculture Organization) மாநாட்டில், உலக உணவு தினம் அதிகாரப்பூர்வமாக உலக விடுமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தினத்தை, கொண்டாட்டங்களுக்கு ஒரு முக்கியமான நாளாக ஏற்றுக்கொண்டன.

உலக உணவு தினத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா?

இந்த ஆண்டின் உலக உணவு தினத்துக்கான கருப்பொருள் என்பது "சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுகளுக்கான உரிமை" என்பதாகும். இந்த பிரசாரம் பசியை ஒழிப்பது மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் தரமான, சத்தான மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உணவை உறுதி செய்வதிலும் செயல்படுகிறது.

பிரபஞ்சம் அதன் அனைத்து மக்களுக்கும் உணவளிக்க போதுமான உணவை உருவாக்குகிறது. மேலும் நீர் மற்றும் காற்றுக்கு அடுத்தபடியாக மனிதனின் மூன்றாவது அடிப்படைத் தேவையாக உணவு மதிப்பிடப்படுகிறது.

"பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது. இது பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. நம் உடலில் 50%-க்கும் அதிகமாக நீர் உள்ளது. நமது உணவை உற்பத்தி செய்கிறது. நமக்கான வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது.

ஆனால், இந்த விலைமதிப்பற்ற வளம் எல்லையற்றது அல்ல. நாம் என்ன சாப்பிடுகிறோம். அந்த உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

நம் உணவுக்கான நீர் எங்கு கிடைக்கிறது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்" என்று அமெரிக்காவின் உணவு மற்றும் வேளாண் அமைப்புகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கின்றன.

இந்த நாளில், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு மற்றும் நீரும் சமமான அளவில் கிடைப்பதின், முக்கியத்துவத்தை ஏற்படுத்த நிறுவனங்கள் முனைகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.