International Literacy Day: சர்வதேச எழுத்தறிவு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தீம்
International Literacy Day: சர்வதேச எழுத்தறிவு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் மற்றும் தீம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
International Literacy Day 2024: கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுக்கான எழுத்தறிவின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காகவும், கல்வியறிவு மற்றும் நிலையான சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), அதன் பொது மாநாட்டின் 14 வது அமர்வில், இந்த நிகழ்வை அறிவித்தது மற்றும் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் 1967 இல் கொண்டாடப்பட்டது.
1967ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
உலகு எங்கிலும் சர்வதேச எழுத்தறிவு தின ஆண்டு கொண்டாட்டங்கள், கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கல்வியறிவின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன.
அந்த வகையில் அதிக கல்வியறிவினை இந்த சமூகத்தில் நியாயமான மற்றும் அமைதியான முறையில் உருவாக்கலாம்.
எழுத்தறிவின் நன்மைகள்:
எழுத்தறிவு என்பது அனைவருக்கும் ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இது மற்ற மனித உரிமைகள், அதிக சுதந்திரம் மற்றும் உலக குடியுரிமை ஆகியவற்றை அனுபவிப்பதற்கு ஒரு வழியைக் காட்டுகிறது. சட்டத்தின் ஆட்சி, ஒற்றுமை, நீதி, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதிக்கான கலாசாரத்தை வளர்ப்பதற்கான பரந்த அறிவு, திறன்கள், மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை மக்கள் பெறுவதற்கு எழுத்தறிவு ஒரு அடிப்படை ஆதாரமாகும்.
அடிப்படை எழுத்தறிவின் மூலம் பிறமக்களுடன் இணக்கமான உறவைப் பெற முடியும்.
2022-ல் நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஏழு பேரில், ஒருவருக்கு அடிப்படை கல்வி அறிவு இல்லை.
கூடுதலாக, மில்லியன் கணக்கான குழந்தைகள் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணியல் ஆகியவற்றில் குறைந்தபட்ச திறன்களைப் பெறுவதற்குப் போராடுகிறார்கள். அதே நேரத்தில் 6 முதல்18 வயதுடைய 250 மில்லியன் குழந்தைகள் பள்ளிப் படிப்பை படிக்காமல் உள்ளனர்.
சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருப்பொருள்:
இந்த 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச எழுத்தறிவு தினமானது, "பன்மொழிக் கல்வியை ஊக்குவித்தல்: பரஸ்பர புரிதல் மற்றும் அமைதிக்கான எழுத்தறிவு" என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடப்படுகிறது.
பரஸ்பர புரிதல், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கு எழுத்தறிவின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது. இன்றைய உலகில், பல மொழி பேசுவது பலருக்குப் பொதுவான நடைமுறையாக உள்ளது.
கல்வியறிவு மேம்பாடு மற்றும் கல்விக்கான முதல் மொழி அடிப்படையிலான, பன்மொழி அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மக்களை மேம்படுத்துவது அவர்களின் அறிவு, கல்வியியல் மற்றும் சமூக-பொருளாதார நன்மைகள் மேம்பாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
கல்வி அறிவு பெறுவது பிரிவினைத்தூண்டுதல்கள் மற்றும் கூட்டுப் பிரச்னைகளை அறிந்துகொள்ள உதவும். அதே வேளையில் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையை மேம்படுத்த உதவும்.
சர்வதேச எழுத்தறிவு தினம் நீடித்த அமைதியை அடைவதற்காக பன்மொழி சூழல்களில் கல்வியறிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் மற்றும் கொள்கைகள், வாழ்நாள் முழுவதும் கற்றல் அமைப்புகள், நிர்வாகம், திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியமான தீர்வுகளை ஆராய உதவும். சர்வதேச எழுத்தறிவின்படி, உலகளாவிய, பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் நேரிலும் ஆன்லைனிலும் இந்த சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும்.
டாபிக்ஸ்