DIRECTOR SARAN JOURNEY: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்-director saran shares about his first movie journey and ajith kumar kadhal mannan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Saran Journey: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்

DIRECTOR SARAN JOURNEY: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 10:22 PM IST

Director Saran Cinema Journey:அஜித்தை அவரது வீட்டில் சந்தித்த போது,ஒரு காபி குடித்த பின்னர் காதல் மன்னன் படத்தில் நடிக்க உடனடியாக ஒகே சொன்னார். நான் முதல் படத்தில் கமிட்டான விஷயம் முன்னரே தெரிந்த போதிலும் அவர் அதுபற்றி என்னிடம் கேட்காமல் இருந்தார் என இயக்குநர் தனது சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார்.

Director Saran Cinema Journey: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்
Director Saran Cinema Journey: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்

இயக்குநர் சிகரம் பாலசந்தரின் உதவியாளரான சரண், தனது முதல் படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். சிறுத்தை சிவாவுக்கு முன்னரே அஜித்குமாரை வைத்து நான்கு படங்கள் இயக்கிய இயக்குநரான இவர், அஜித்தின் 25வது என்ற மைல்கல் படத்தை இயக்கியவரும் இவர்தான்.

சினிமா பயணம்

இயக்குநர் சரண் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலையில், தனது முதல் படம் இயக்கிய அனுபவத்தை பிரபல யூடியூப் சேனலில் பேசியுள்ளார்

அதில், "சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்து விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, கலை இயக்குநர் மோகன் மகேந்திராவின் மனைவியிடம் டெக்ஸ்டைல் டிசனைராக பணியாற்றி வந்தார்.

இவரது ரெபரென்ஸ் மூலம் பாசந்தரை சந்தித்து அவரின் உதவியாளராக சேர்ந்தார். புதுபுது அர்த்தங்கள் படத்திலிருந்து கல்கி படம் வரை எட்டு படங்களில் அசிஸ்டெண்டாக பணியாற்றினார்.

புதுபுது அர்த்தங்கள் படத்தில் இருந்து விவேக்குடன் நட்பாக பழகி வந்த சரண் இயக்குநர் ஆகும் முயற்சித்துள்ளார். முதல் கதையை தயார் செய்தேன். ஆசை, காதல் கோட்டை படத்தை பார்த்த பின்பு என் கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பார் என நம்பினேன்.

அஜித்துடன் முதல் சந்திப்பு

விவேக்கின் உதவியுடன் அஜித்தை மந்தைவெளியில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தேன். தூங்கி எழுந்து கண்ணை கசக்கி கொண்டு வந்தார். அவரது தயார் காபி கொடுத்தார்.

அப்போது கேபி சாரிடம் அசிஸ்டென்டாக இருந்தது பற்றி சொன்னேன். கதை சொல்வது பற்றி கேட்டபோது, கேபி சாரிடம் பணியாற்றியுள்ளீர்கள், இதுவே போதும், நான் உங்களுடன் இருக்கிறேன் என உடனே ஒப்புக்கொண்டார்

அங்கிருந்து புறப்படும்போது தனது தயாரிப்பாளருக்கும் உடனடியாக போன் போட்டு இயக்குநரை அனுப்புவதாக தெரிவித்தார். இவ்வளவு எளிதாக வாய்ப்பு அமைந்தது.

ஹீரோயின் தேர்வு

டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த மானு பற்றி விவேக் சொன்னார். நானும், விவேக்கும் அவரை சந்தித்து பேசி ஹீரோயினாக நடிப்பது பற்றி கேட்டோம். முதலில் அவர் சம்மதிக்கவில்லை.

பின்னர் மானுவின் தந்தையை வரவழைத்து சம்மதம் பெற்றோம்.

எம்எஸ்வியும் இதுபோல் தான்,முதலில் நடிக்க சம்மதிக்கவே இல்லை. நானும், விவேகும் அவரை பல வகைகளில் செல்லமாக மிரட்டினோம். ஒரு வழியாக அவர் சம்மதம் தெரிவித்தார். இப்படியாக படம் உருவானது.

பாலசந்தர் ஆசிர்வாதம்

பாலசந்தரிடம் கல்கி படத்தில் பணியாற்றும்போதே காதல் மன்னன் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனாலும் அதை ரகசியமாக வைத்திருந்தேன். கல்கி படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்தததும் தயக்கத்துடன் அவரை சந்தித்து சொன்னேன்.

அதற்கு முன்னரே காதல் மன்னன் பட டைட்டிலை ரெஜிஸ்டர் செய்த தகவல் அவருக்கு கிடைத்து, நான் படம் இயக்கபோகும் விஷயமும் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததே அறிந்தேன். அந்த நேரத்தில் வேறு எதுவும் சொல்லாமல் மனைவி அழைத்து எனக்கு வாழ்த்து சொல்லி அனுப்பினார்." என்றார்.

அஜித் - சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன் சூப்பர் ஹிட்டாக நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடரந்து அஜித்தின் 25வது படமான அமர்க்களம், அட்டகாசம், அசல் என அஜித்தை வைத்து மூன்று அ வரிசை படங்களை சரண் இயக்கியுள்ளார்.

கடைசியாக சரண் இயக்கத்தில், 2019ஆம் ஆண்டில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.