தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Hemoglobin Level Want To Increase Hemoglobin Just 2 Of These Lattes A Day Is Enough

Hemoglobin Level : ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? தினமும் இந்த லட்டு 2 மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Apr 16, 2024 01:50 PM IST

Hemoglobin Level : என்ன சாப்பிட்டாலும் ஹீமோகுளோபின் அளவு மட்டும் அதிகரிக்கவே மாட்டேன் என்கிறதா? இதோ இந்த லட்டு மட்டும் முயற்சித்து பாருங்கள்.

Hemoglobin Level : ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? தினமும் இந்த லட்டு 2 மட்டும் போதும்!
Hemoglobin Level : ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? தினமும் இந்த லட்டு 2 மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லம் – ஒரு கப்

உப்பு – ஒரு சிட்டிகை

சீரகப்பொடி – அரை ஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – கால் ஸ்பூன்

ட்ரை மேங்கோ பொடி – அரை ஸ்பூன்

சுக்குப்பொடி – அரை ஸ்பூன்

டெசிகேடட் கோகனட் – சிறிதளவு

நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் அரைத்த நெல்லிக்காய் விழுதுகளை சேர்க்க வேண்டும்.

நன்றாக வதக்கி பின்னர், அதில் ஒரு கப் வெல்லம் சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு, சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், கரம் மசாலாத் தூள், ட்ரை மேங்கோ தூள் மற்றும் சுக்குத்தூள் சேர்த்து நன்றாக கிளறி சுருள வதக்கவேண்டும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிய லட்டுகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதை டெசிகேடட் கோக்கனட்டில் சேர்த்து, பிரட்டவேண்டும். இதை நன்றாக ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது இளஞ்சூடாக இருக்கும்போது, கொஞ்சம் பிசுபிசுப்புடன் இருக்கும். ஆறியவுடன் நன்றாக கெட்டியாகிவிடும்.

இதை தினமும் காலை 2 லட்டுகள் அல்லது மாலையில் இரண்டு லட்டுகள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். உடலின் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது வயோதிகத்தை தள்ளிப்போடும் தன்மைகொண்டது. நெல்லிக்காய் பரவலாக எங்கும் உள்ளது. எனவே அனைவரும் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. அதிகளவு கிடைக்கும் காலங்களில் இதுபோல் லேகியம் செய்து நீண்ட நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. 

எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்