தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Heart Attack: மாரடைப்பை தடுக்க உதவும் அற்புத உணவுகள் இதோ!

Heart Attack: மாரடைப்பை தடுக்க உதவும் அற்புத உணவுகள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 08, 2023 11:07 AM IST

ஆரோக்கியமான இரத்த ஓட்ட அமைப்பைப் பராமரிப்பதிலும், இரத்தக் கட்டிகளைத் தடுப்பதிலும் நாம் செய்யும் உணவுத் தேர்வுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் உண்ணும் உணவுதான் நமது இரத்த ஓட்ட அமைப்பு செயல்படும் முறையை தீர்மானிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறை இரத்தக் கட்டிகளைத் தடுக்க உதவுகிறது. இதை ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி விளக்கி உள்ளார். " நாம் உண்ணும் உணவு, இரத்தக் கட்டிகளுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பு! ஆரோக்கியமான இரத்த ஓட்ட அமைப்பைப் பராமரிப்பதிலும், இரத்தக் கட்டிகளைத் தடுப்பதிலும் நாம் செய்யும் உணவுத் தேர்வுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை நமது இரத்தக் கட்டிகள் தீர்மானிக்கும். சில உணவுகள் இரத்த ஓட்ட அமைப்பை சீராக வைத்து மாரடைப்பு ஆபத்தை தவிர்க்கிறது. சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் இரத்தத்தை ஒட்டும் மற்றும் கட்டியாக படிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இரத்த ஓட்டத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுப் பொருட்கள் குறித்த பார்க்கலாம்.

கருப்பு காளான்கள், ஆன்டிகோகுலண்ட் பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் இரத்தத் தட்டுக்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க உதவுகின்றன.

இஞ்சி மற்றும் பூண்டு இரத்த கட்டி அடைப்புகளை உடைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தை மெல்லியதாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும் அவைகளை கரைக்க உதவுகிறது.

வெங்காயம் தினசரி உணவில் அவசியம், ஏனெனில் வெங்காயத்தில் உள்ள கலவைகள் பிளேட்லெட்டுகள் கட்டியாகாமல் தடுக்க உதவுகிறது.

ஆளிவிதைகள் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும். இதனால் இரத்த ஓட்ட அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கிவி பழம்: நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கிவி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு குறைந்த இரத்த தட்டுககள் செயல்பாட்டை கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆலிவ் ஆயில்: ஆலிவ் எண்ணெயில் உள்ள பினோல்கள் இரத்தம் கட்டுவதை தடுக்க உதவுகிறது.

மீன்கள்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரத்தத்தை மெல்லியதாகவும், உறைதல் மற்றும் பக்கவாதம் இரண்டையும் தடுக்கவும் உதவுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்