Benefits of Turkey Berry: மாதவிடாய் கோளாறு முதல் ஹீமோகுளோபின் வரை பலன் அளிக்கும் சுண்டைக்காய்!-healthy benefits of turkey berry and its nature - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Turkey Berry: மாதவிடாய் கோளாறு முதல் ஹீமோகுளோபின் வரை பலன் அளிக்கும் சுண்டைக்காய்!

Benefits of Turkey Berry: மாதவிடாய் கோளாறு முதல் ஹீமோகுளோபின் வரை பலன் அளிக்கும் சுண்டைக்காய்!

Suguna Devi P HT Tamil
Sep 24, 2024 02:58 PM IST

Benefits of Turkey Berry: சுண்டைக்காய் என்பது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால் அனைவராலும் அறியப்படும் ஒரு காய்கறி ஆகும். இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழம்புகள், பொரியல்கள் வைக்கப்படுகின்றன.

Benefits of Turkey Berry: மாதவிடாய் கோளாறு முதல் ஹீமோகுளோபின் வரை பலன் அளிக்கும் சுண்டைக்காய்!
Benefits of Turkey Berry: மாதவிடாய் கோளாறு முதல் ஹீமோகுளோபின் வரை பலன் அளிக்கும் சுண்டைக்காய்!

சுண்டைக்காய் சாபிடுவதால் பல விதமான நன்மைகள் உண்டாகின்றன. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இந்த சுண்டைக்காய் சிறந்த தீர்வை தரும். இத்தகைய சுண்டைக்காய் தரும் பயன்களை தெரிந்து கொள்க.

சுண்டைக்காய் நன்மைகள் 

  • காடுகளில் தானாக வளரும் சுண்டைக்காய்கள் மலைசுண்டை எனவும், தோட்டங்களில் வளர்க்கப்படும் சுண்டைக்காய்  பால் சுண்டை எனவும் வழங்கப்படுகிறது. நாம் தோட்டங்களில் வளர்க்கும் பால் சுண்டைக்காயை நமது உணவுகளில் பயன்படுத்துகிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.
  • ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் இந்த சுண்டைகக்காயை தினம் தோறும் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர சரியாகும். மேலும் கருமுட்டை வளர்ச்சி அடையும். மேலும் அடிக்கடி ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டு வார இது நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. 
  • சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். சிறு வயது முதலே, குழந்தைகளுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட கொடுக்க வேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். 
  • மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும். 
  • சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம். இருப்பினும் சுண்டைக்காய் சாப்பிடுவதில் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.  

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.