Sundakkai Thuvaiyal : வாரம் ஒரு முறை இதை செய்து கொடுங்கள்.. அவ்வளவு சுவையாக இருக்கும்.. சுண்டைக்காய் துவையல் செய்யலாமா?
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டக்காய் - 2 (கை நிறைய)
சன்னா தால் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5/6
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 5
தேங்காய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு 2 நிமிடம்
இலைகள் - 2 கிளைகள்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
சுவைக்கு உப்பு
செய்முறை
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். முதலில் நீங்கள் சுண்டக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள காம்பை தனியாக எடுத்து நீக்கிவிட்டு சுண்டக்காயை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுண்டக்காயை நசுக்கி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் பிரிந்து போகும் அளவுக்கு நசுக்க வேண்டாம். விதைகள் வெளியே வரும் அளவிற்கு நசுக்கினால் போதுமானது.
பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இடித்து வைத்த சுண்டைக்காயை தோல் சுருங்கும் வரை வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த எண்ணெயில் கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்றவாறு வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் அதில் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, சுண்டக்காய் சேர்க்கவும்.
தேங்காய் துருவலை சேர்த்து பின்னர் அதில் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள், இவை அனைத்தையும் நன்கு வதக்கிய பிறகு அதனை ஆற வைத்துவிட்டு பின்னர் அதனை மிக்ஸியில் அல்லது அம்மிலோ அரைத்து பரிமாறுங்கள். உங்களுக்கு இப்போது சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி.
இதனை ஒரு முறை சுவைத்தால் விட மாட்டீர்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இதில் எக்கச்சக்க நன்மைகளும் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான இந்த துவையலை இனி வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள்.
சுண்டைக்காய் நன்மைகள்
காய்கறி வகைகளில் மிகவும் சிறியதாக இருப்பது சுண்டைக்காய். கசப்பான சுண்டைக்காயில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக நம் உடலுக்கு தேவையான புரதம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையை சீராக்க பெரும் உதவியாக இருக்கிறது சுண்டைக்காய். இதற்கு காரணம் சுண்டைக்காயை சாப்பிடும் போது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் என்றும் நீர்க்கட்டி, தைராய்டு போன்ற பிரச்னைகளால் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை சீர்செய்யும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதில் இருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளை செய்யக்கூடிய பெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின்கள் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக கொண்டுள்ளது சுண்டைக்காய். இவை தவிர நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டுள்ளது. ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின்-சி இதில் அதிகமுள்ளது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. அனைவரும் வியப்படையும் வண்ணம் சுண்டைக்காயை சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும். இதிலிருக்கும் ஆன்டிவைரல் பண்புகள் உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் விரைந்து ஆற வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்