Benefits of Mushroom : புற்றுநோயை அடித்து விரட்டும்; வைட்டமின் டியை வாரி வழங்கும்; நோயை விரட்டும் காளான் ஒரு கவசம்!
Benefits of Mushroom : புற்றுநோயை அடித்து விரட்டும், வைட்டமின் டியை வாரி வழங்கும், நோயை விரட்டும் எதிர்ப்பாற்றல் கொண்ட காளான் உங்கள் உடலுக்கு ஒரு கவசம். இதன் மற்ற நன்மைகளைப் பாருங்கள்.
காளான்
காளானில், பல வகை உள்ளது. இதில் செலினியம், காப்பர், தியாமின், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது. ஒரு கப் காளானில் 15 கலோரிகள் உள்ளது. 2.2 கிராம் புரதம் உள்ளது. கொழுப்பு 0.1 கிராம், கார்போஹைட்ரேட்கள் 3.7 கிராம், நார்ச்சத்துக்கள் 0.5 கிராம், சர்க்கரை 1.5 கிராம் உள்ளது. காளானில் உள்ள நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். காளான்கள் உங்கள் உணவுக்கு கார சுவையைக் கொண்டுவருகின்றன. இதை சாப்பிடும்போது உங்கள் உடலில் அதிகம் கொழுப்பு மற்றும் சோடியம் சேராது என்பது இதன் கூடுதல் பலன். இதில் உள்ள நன்மைகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டிய நன்மைகள் காளானில் உள்ளதாகவே கூறப்படுகிறது. அதுகுறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாள்பட்ட நோய்களை அகற்றி உங்களின் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குகிறது.
புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது
ஒரு நாளில் 18 கிராம்கள் காளான் சாப்பிட்டாலே போதும் அது உங்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்தை 45 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. காளானில் அமினோஅமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் எர்கோதியோனைன்கள் ஆகியவை உள்ளன. இவை உங்கள் உடலில் செல் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பிட்ட சில வகை காளான்களில் எர்கோதியோனைன்கள் அதிகம் உள்ளது. எனவே பல்வேறு வகை காளான்களையும் நீங்கள் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு புற்றுநோய் ஆபத்தைக் குறைப்பதுடன் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
சோடியம் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது
சோடியமும், உயர் ரத்த அழுத்தமும் ஒன்றாகசச் செல்பவை. சோடியம், உடல் தேவையற்ற தண்ணீரை தக்கவைக்கச்செய்கிறது. இதனால் உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே உங்கள் உடலில் சோடியத்தின் அளவைக் குறைக்க நீங்கள் காளான்களை உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். காளான்களில் சோடியம் குறைவு, ஒரு கப் காளானிலே 5 மில்லிகிராம்தான் சோடியம் உள்ளது. காளானில் உள்ள காரசுவை நீங்கள் கூடுதலாக உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் ரத்தம் அழுத்தம் குறைகிறது. இறைச்சி உணவுடன் காளானை சேர்த்து சமைத்து உட்கொள்ளும்போது அது 25 சதவீதம் சோடியம் எடுத்துக்கொள்வதை குறைப்பதாக அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பை குறைக்க உதவுகிறது
சிவப்பு இறைச்சிக்கு சிறந்த மாற்று என்றால், அது காளான்கள், இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை குறைவு. குறிப்பிட்ட சில வகை காளான்கள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. கொழுப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. உங்கள் ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
காளான்களை சாப்பிடுவதால், அது உங்கள் மூளைக்கு சில பலன்களை தருகிறது. நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றுக்கு உதவுகிறது. அல்சைமர் நோய் வராமல் காக்கிறது. இது சிங்கப்பூரில் நடந்த ஆய்வு இதை நிரூபித்துள்ளது.
உடலுக்கு தேவையான வைட்டமின் டியை வழங்குகிறது
வைட்டமின் டி, உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சி, வலுவான எலும்புகளை உற்பத்தி செய்து பராமரிக்க உதவுகிறது. இதற்காக வெயிலில் உலவுவது அல்லது மாத்திரைகள் எடுப்பது என சிலர் இருப்பார்கள். ஆனால் உங்கள் உணவில் காளானை சேர்த்துவிட்டால் அதற்கான தீர்வு கிடைத்துவிடும். அவை உங்கள் உடலில் வைட்டமின் டி உற்பத்திக்கு உதவும். சில காளான்களில் உள்ள வைட்டமின் டி சத்துக்களை அதிகரிக்க அவை சூரிய ஒளி அல்லது புறஊதா வெளிச்சத்தில் வளர்க்கப்படுகின்றன. நீங்கள் காளானை சமைக்கும் முன் சிறிது நேரம் வெயிலில் வைத்து சாப்பிடலாம். அதில் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
குடல் ஆரோக்கியத்தை தூண்டுகிறது
உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிர்கள், அதில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க நுங்கள் உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வளர ஊக்குவிக்கவேண்டும். அதற்கு காளான் நல்ல தேர்வு. காளானில் உள்ள கார்போஹைட்ரேட்கள் மற்றும் பாலிசாச்ரைட்கள் வயிற்றில் அதிகளவில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றன. சில உணவுகள் குடலில் உள்ள அமிலங்களுடன் சேர்த்து உடையும், ஆனால் காளானில் உள்ள பாலிசாச்சாரைட்கள், மாறாமல் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
காளான் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், காளானில் உள்ள செலினியம், இது உங்கள் உடல் ஆன்டிஆக்ஸிடன்ட் எண்சைம்களை உருவாக்க உதவுகிறது. செல் சேதத்தை தடுக்கிறது. வைட்டமின் டி, உங்கள் உடலில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயக்குகிறது. வீக்கத்தை குறைக்கிறது. உங்கள் உணவில் வைட்டமின் டியை சேர்க்க காளான் சிறந்த தேர்வு. வைட்டமின் பி6, உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. புரதங்கள், டிஎன்ஏக்கள் உருவாக காளான் சிறந்த தேர்வு.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்