தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Report Medicine In Search Of People 50 Percent Of Icu Low Clearance What Is The Reality An Analysis

Health Report : ‘மக்களைத் தேடி மருத்துவம்’ – 50 சதவீத ஐ.சி.யூ. அனுமதி குறைவா? – உண்மை நிலை என்ன? ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Mar 17, 2024 07:00 AM IST

Health Report : சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பை பொறுத்தமட்டில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வோரின் எண்ணிக்கை குறையாது. மாறாக அவற்றின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும தீவிர சிகிச்சைப் பிரிவில் சோர்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

Health Report : ‘மக்களைத் தேடி மருத்துவம்’ – 50 சதவீத ஐ.சி.யூ. அனுமதி குறைவா? – உண்மை நிலை என்ன? ஓர் அலசல்!
Health Report : ‘மக்களைத் தேடி மருத்துவம்’ – 50 சதவீத ஐ.சி.யூ. அனுமதி குறைவா? – உண்மை நிலை என்ன? ஓர் அலசல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக மாநில திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன், ‘தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது என அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.

என்றாலும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அது சரியா எனும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இலவசமாக இல்லங்களைத் தேடிச்சென்று வழங்கப்பட்டாலும், அதன் மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு பாதிப்புகள் குறைந்ததன் விளைவாக தவிர சிகிச்சைப் பிரிவில் சோர்வோர் எண்ணிக்கை குறைந்ததாக மாநில திட்டக்குழு அறிக்கை ஒருவேளை வாதிட்டாலும், புள்ளிவிவரங்கள் அதை மறுப்பதாக உள்ளது.

திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில்,22 சதவீதம் பேருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும், 35 சதவீதம் சிகிச்சை பெறுவோர்களிடத்து மட்டுமே அது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

சர்க்கரை நோயை பொறுத்தமட்டில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில், 21 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும், 10 சதவீதம் பேர்களிடம் மட்டுமே அது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பை பொறுத்தமட்டில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வோரின் எண்ணிக்கை குறையாது. மாறாக சர்க்கரை அளவு, ரத்தக்கொதிப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும தீவிர சிகிச்சைப் பிரிவில் சோர்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

அது இல்லாதபோது, திட்டத்தின் விளைவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சோர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது எனும் வாதம் சந்தேகங்களை எழுப்புகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாகத் தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோர்வோரின் எண்ணிக்கை குறைந்தது என்பதற்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாதம் ஒருமுறை மட்டுமே மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.

மாறாக, சென்னை IIT ஆய்வு முடிவுகள், ‘தமிழகத்தில் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் தினமும் ஏழை மற்றம் எளிய மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடிவதுடன் மக்களின் சுகாதார செலவையும் கணிசமாக குறைக்க முடியும் என இருந்தும் தமிழக அரசு அல்லது சுகாதாரத்துறை துணை சுகாதார மையங்களை மேம்படுத்தி அன்றாடம் சாதாண ஏழை மற்றும் எளிய மக்களுக்கு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என இருந்தும் துணை சுகாதார மையங்களை அரசு மேம்படுத்தாமல், தவறான கருத்துகளுடன் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை மட்டுமே நியாயப்படுத்த முயல்வது எப்படி சரியாகும்?

சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் மாத்திரைகளைக் காட்டிலும், உணவு முறை மாற்றம் (அதிகநார் சத்துள்ள சிறுதானியங்களை உட்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்) உடற்பயிற்சி போன்றவையே கூடுதல் பலனைக் கொடுக்கும்.

ரத்தக்கொதிப்பை பொறுத்தமட்டில் உப்பு அல்லது கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதலும் (உலக சுகதார நிலையத்தின் வழிகாட்டுதல்படி, மக்கள் வெளியில் வாங்கும் உணவுகளின் முன்பக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை பட்டியலிடுவது Front of pack labelling (FoPL), மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்றா நோய்களின் பாதிப்பை குறைத்துள்ளது என்ற செய்தியையும், இஸ்ரேல், சிலி போன்ற நாடுகள் அதை பின்பற்றி தொற்றா நோய்களின் பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ளதை இந்தியா மற்றுத் தமிழகம் ஏன் பின்பற்றக் கூடாது?

உடற்பயிற்சியும் முக்கியாமானதாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில், இல்லங்களைத் தேடிச்சென்று மாத்திரைகள் கொடுப்பதற்கு பதில், மக்களே அருகில் உள்ள துணை சுகாதார மைங்களுக்கு நடந்துசென்று (அதனால் தேவையான நடைப்பயிற்சி செய்து) மாத்திரைகளை பெற்றுக்கொள்வது (தினமும் இது சாத்தியம். 

ஆனால் மக்களைத் தேடி மருத்துவத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே மாத்திரைகள் வழங்கப்படுகிறது) மிகச்சிறந்த பலனைக் கொடுப்பதால், எழை அல்லது எளியோரின் நலன்கருதி தினமும் இயங்கும் துணை சுகாதார மையங்களை மேம்படுத்த தமிழக அரசு அல்லது சுகாதாரத்துறை முன்வரவேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் (மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உட்பட) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு கொடுக்கப்படும் மாத்திரைகளின் தரம் குறைவாக உள்ளது என்பதை எளிதில் யாரும் மறுக்க இயலாது.

எனவே, மேற்சொன்ன நோய்க்கான மருந்துகளின் தரத்தை அரசு உறுதிசெய்தல் வேண்டும். மருந்துகள் அரசு தரப்பில் வாங்கும் போது ஊழல்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள் தேவை.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

WhatsApp channel

டாபிக்ஸ்