Health Mix : ஹார்லிக்ஸ், பூஸ்டுக்கு மாற்று! இப்டி ஒரு ஹெல்த் மிக்ஸ் செஞ்சு பாருங்க! ஆரோக்கியம் உறுதி!
Health Mix : டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ்க்கு பதில் இப்படி ஒரு ஹெல்த் மிக்ஸ் பருகிப்பாருங்கள். உங்கள் உடல் நீங்கள் சொல்வதை செய்யும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
உளுந்து – 50 கிராம் (கருப்பு உளுந்தும் எடுத்துக்கொள்ளலாம்)
பாசிபருப்பு – 50 கிராம்
பாசிபயிறு – 50 கிராம்
(தினமும் ஒரு கைப்பிடியளவு பாசிபயிறு சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்)
கருப்பு கவுனி அரிசி -50 கிராம்
இதற்கு பதில் சாதாரண புழுங்கல் அரிசியும் எடுத்துக்கொள்ளலாம்.
(எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது. இது மூட்டு வலி, கை-கால் வலி பிரச்னைகளை குணப்படுத்தும். மலச்சிக்கலை தவிர்க்கும்)
பொட்டுக்கடலை – 50 கிராம்
முந்திரி – கைப்பிடியளவு
பாதாம் – கைப்பிடியளவு
ஏலக்காய் – 4
(ஏலக்காய் வாசத்துக்கு, முந்திரி மற்றும் பாதாம் இரண்டும் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம்)
செய்முறை
அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை மூன்று மாதம் வரை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்துக்கொள்ளலாம். கெடாமல் இருக்கும். இதை நாளொன்றுக்கு ஒரு ஸ்பூன் அளவு ஒரு ஆள் பயன்படுத்தலாம்.
இதை சிறிது பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், அதில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
அனைத்து பொருட்களும் வறுத்து அரைத்துள்ளதால், எளிதாக ஜீரணமாகிவிடும். பால் கொதி வந்தவுடன் இறக்கி, மிதமான சூட்டில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்.
இது உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது. வேறு ஹெல்த் டிரிங் பருகுவதற்கு பதில், இதை நீங்கள் குடிக்கலாம். இதன் சுவை நன்றாக இருக்கும். இதை ஒருமுறை சுவைத்தால் போதும், உங்களுக்கு வேறு எதுவும் பிடிக்காது.
தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும். ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் பருகலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்