KR Vatsala: ‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல.. பாதி வாழ்க்கையில விவாகரத்து..அக்காவ குறை சொல்ல முடியாது’ - KR வத்சலா!-kr vatsala latest interview about her effects of polio cinema career divorce life sister k r vijaya pregnancy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kr Vatsala: ‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல.. பாதி வாழ்க்கையில விவாகரத்து..அக்காவ குறை சொல்ல முடியாது’ - Kr வத்சலா!

KR Vatsala: ‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல.. பாதி வாழ்க்கையில விவாகரத்து..அக்காவ குறை சொல்ல முடியாது’ - KR வத்சலா!

Kalyani Pandiyan S HT Tamil
May 28, 2024 11:24 AM IST

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, என்னுடைய கணவர் அவருக்கு சரியான மனைவியாக நான் இல்லை என்று நினைத்திருக்கிறார். இதையடுத்து நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் தற்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

கே ஆர் வத்சலா பேட்டி!
கே ஆர் வத்சலா பேட்டி!

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ எங்களுடைய வீட்டில் அக்காதான் குடும்பத்தின் எல்லா வித பொறுப்பையும் தலையில் தூக்கிச்சுமந்தார். அவரைப் பார்த்தாலே, எங்களுக்கு ஒரு பயம் வரும். என்னுடைய கல்யாணத்தையும் அவரே எடுத்து நடத்தி வைத்தார். ஆனால் அந்தக் கல்யாணம் முழுமையான, சந்தோஷமான வாழ்க்கையை நோக்கிச் செல்லவில்லை. 

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, என்னுடைய கணவர் அவருக்கு சரியான மனைவியாக நான் இல்லை என்று நினைத்திருக்கிறார். இதையடுத்து நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் தற்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். 

பெண்களைப் பொறுத்தவரை, நம்முடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அது சரிவர அமைவது என்பது நம்முடைய தலையெழுத்தில்தான் இருக்கிறது. அந்த விஷயத்தில் என்னுடைய தாயையோ, தகப்பனையோ, அக்காவையோ நான் குறை சொல்ல முடியாது. எனக்கு பக்குவம் இல்லாத காரணத்தினால்தான், அந்த உறவை என்னால் கைகொள்ள முடியவில்லை. 

அந்த துயரச்சம்பவம், எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்தது. பெண்கள் எக்காரணத்திற்கு கொண்டும், பொருளாதார ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பின்னோக்கி இருக்கவே கூடாது. 

நாம் என்றுமே நம்முடைய தனித்தன்மையோடு இருக்க வேண்டும். அந்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை இந்தத் திருமணம், குழந்தை உள்ளிட்ட இதர விஷயங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் அந்த காலகட்டத்தில், கல்வி ரீதியாக நாம் இன்னும் தேர்ந்த நிலையை அடைந்து இருக்க வேண்டுமே என்று யோசித்தேன்.

எனக்கு  உடலில் சில பிரச்சினைகள் இருந்தன. அதனால் என்னால், தாய்மையை அடைய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நான் தாய்மை அடைந்தேன். கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்தும் கூட, எனக்கு பிரசவ வலி வரவில்லை. 

இந்த நிலையில், வேறுவழியில்லாமல் திடீரென்று ஒரு நாள் அவசரகதியாகச் சென்று, குழந்தையை வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுத்தார்கள். 

மருத்துவர் மிகவும் சிக்கலான நிலைமை உங்கள் உடல் நிலையில் நிலவுகிறது. ஆகையால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லாதவரை அதில் படும் கஷ்டங்கள் குறித்து பயந்த நான், குழந்தை வந்தவுடன் இன்னொரு பெண் குழந்தை இருந்தால், நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்." என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.