மன அழுத்ததை குறைக்க பிராமி டீ குடியுங்கள்! வேறென்ன பயன்கள்! தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் விரும்பப்படும் சக்தி வாய்ந்த மூலிகைக் கஷாயமான பிராமி டீயை பயன்படுத்தினால் சிறப்பான பலன்களை பெறமுடியும்.

பிராமி
பிராமி என்பது சேற்று சதுப்பு நிலங்களில் காணப்படும் தரையில் வளரும் மூலிகை செடியாக்கும். இதன் இலைகள் சற்று சதைப்பற்றுள்ளவை மற்றும் வெளிர் நீலம், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு பூக்களுடன் அடர்த்தியானவையாக இருக்கும். இது நீர் மருதாணி, இந்திய பென்னிவார்ட் என்றும் அழைக்கப்படுகிறது. பிராமி இலைகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. ஏர்ல் மைண்டலின் ‘தி மெமரி பைபிள்’ பிராமியை மூளை டானிக் என்று குறிப்பிட்டுள்ளது!
உண்மையான பிராமி
பல மூலிகைகளை பிராமி என்று அழைப்பதால் எது உண்மையான பிராமி என்ற குழப்பம் எழுகிறது. பிராமி என்று குறிப்பிடப்படும் மூலிகைகள் சென்டெல்லா ஆசியாட்டிகா, பாகோபா மோனியேரி மற்றும் ஹைட்ரோகோடைல் ஆகிய தாவர குடும்பங்களை சேர்ந்தவையாகும். கேரளம் மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் இது அதிகம் வளரும்.