காய்ச்சல், நெஞ்சு சளியைப் போக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கஞ்சி; மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி!
காய்ச்சல், நெஞ்சு சளியைப் போக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கஞ்சி, அரிசி குருணை மற்றும் திப்பிலியில் செய்யப்படும் மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி.
இந்தியாவின் புழக்கத்தில் உள்ள மூலிகைகளில் திப்பிலியும் ஒன்று. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. திப்பிலி கல்லீரல் பிரச்னைகளைப் போக்கி, மஞ்சள் காமாலைக்கு குணமளிக்கிறது. இது பாக்டீரியா தொற்றுக்களைப் போக்குகிறது. இது உடல் எடை குறைக்க உதவுகிறது. படுக்கையறையில் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. வலியைப் போக்கி செக்ஸ் உணர்வைத் தூண்டுகிறது. எலும்பு மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. திப்பிலியை மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தினால், அது சுழற்சி சிறப்பாக நடக்க உதவுகிறது. உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை தூண்டுகிறது. வலிப்பு மற்றும் காலரா போன்ற நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. தலைவலி, பல்வலிக்கு தீர்வு கொடுக்கிறது. சளி, இருமலுக்கு விரைவில் தீர்வளிக்கிறது. காய்ச்சலைக் குறைக்கிறது. செரிமானக் கோளாறுகளைப் போக்கி, வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. ஆஸ்துமாவைப் போக்குகிறது. திப்பிலி பைப்பர் லாக்னம் என்ற மரத்தின் பழமாகும். இவை சூரிய ஒளியில் காயவைக்கப்பட்டு, நிழலிலும் உலர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
திப்பிலியில் ஆல்கலைட்கள், பீட்டா சிட்டோஸ்டிரால் மற்றும் வலிக்கு நிவாரணம் தரும் குணங்கள் உள்ளன. இதில் யூஜினால், கிளைக்கோசைட்னய், பெப்பரின், ரிசின்கள், சரிக்கரை, கொழுப்பு, எண்ணெயை, பிப்லார்டைன், மைர்சின், டெர்பினாய்ட்கள், குயிர்செடின், ட்ரையானான்டேன், சில்வாடைன் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கும் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்த தாவரத்தின் வேர்கள் கூட வலி மற்றும் வீக்கத்தைப்போக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்த திப்பிலியைப் பயன்படுத்தி செய்யப்படும் கஞ்சி நமக்கு மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலை விரட்டும். நெஞ்சு சளி கரைக்கும், உடல் வலி தீர்க்கும், புத்துணர்ச்சியைத் தரும்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி குருணை – ஒரு கப்
கருப்பு உளுந்து (ஊடைத்தது) – அரை கப்
பனைவெல்லப்பாகு – அரை கப்
ஏலக்காய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
திப்பிலிப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
அடிக்கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவேண்டும். கொதி வந்தவுடன் அரை மணி நேரம் ஊறவைத்து கழுவி சுத்தம் செய்த அரிசி குருணை மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து வேகவைக்கவேண்டும்.
நன்றாக வெந்தவுடன், அதில் திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி, பனைவெல்லப்பாகு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். கஞ்சி பதத்திலே எடுத்து பருகவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
ஆனால் காய்ச்சல் காலத்தில் சாப்பிடும்போது, ஊறுகாய் மற்றும் அப்பளம் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மழைக்காலத்தில் இந்த கஞ்சியை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துவந்தால், சளி, இருமல், காய்ச்சல் உங்களை அண்டாது.
குறிப்பாக இது இனிப்பு சுவையில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் கட்டாயம் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும் என்பதால் பெரியவர்களுக்கும் பிடிக்கும். திப்பிலியில் உள்ள எண்ணற்ற நற்குணங்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்