தென்பாண்டி சீமையிலே.. “பக்கா பிராமிண்.. நாயக்கன் நம்பும் படிப்பாளி.. மணிரத்னம் கொடுத்த கனம்..” -டெல்லி கணேஷ்!
“நீங்கள் ஒரு பக்கா பிராமிண். சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய ப்ளஸ், உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதுதான். வேலு நாயக்கர் ஒரு இடத்தில்” -டெல்லி கணேஷ்!

தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவரது சினிமா கெரியரில், அவர் நடித்த கதாபாத்திரங்களுள், மிக முக்கியமான கதாபாத்திரமாக பார்க்கப்படும் ‘நாயகன்’ ஐய்யர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அவரே குமுதம் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது,