தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Happy Marriage Life Tips : நீண்ட கால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வேண்டுமா? இந்த 7 மந்திரங்களை பழகுங்கள்!

Happy Marriage Life Tips : நீண்ட கால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வேண்டுமா? இந்த 7 மந்திரங்களை பழகுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 27, 2023 12:00 PM IST

Happy Marriage Life Tips : நீண்ட கால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தேவையான இந்த 7 மந்திரங்களை மட்டும் கற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்றால், உங்கள் உறவில் விரிசல் என்பதே வராது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லாவற்றையும் கடந்து இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படும். ஆனால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிலருக்கு குழப்பம் ஏற்படும். அந்த குழப்பத்தை நீக்குவதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்.

அன்பை வெளிப்படுத்துவது

பொதுவாகவே ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை சிலர் ஒவ்வொரு நிமிடமும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆனாலும், ஒரு சிலருக்கு அதை வெளிப்படுத்த தெரியாது. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வார்கள். 

ஆனால், அந்த அன்பை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். திருமண உறவில் அன்பை வெளிக்காட்டுவது மிக முக்கியமான ஒன்றாகிறது. தினமும், கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு, முத்தம் கொடுத்துக்கொண்டு, கட்டியணைத்துக்கொள்வது என தங்களின் அன்பை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த திருமண உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும்.

உங்கள் இணையர் உங்களில் பாதி, எதிரியல்ல

உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களில் பாதி, அவர்களை உங்கள் எதிரிபோல் பாவித்து நடத்தக்கூடாது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறதென்றால், இருவரும் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு எதிரிகள் போல் நடந்துகொள்ளக்கூடாது. ஏனெனில் நீண்ட கால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அன்பு மிக முக்கியமான ஒன்று

அவர்களின் சிறிய விஷயங்களை கூட பாராட்டுங்கள்

அவர்களுக்கு கிடைக்கும் வெற்றிகள் முதல் அவர் உங்களுக்காக செய்து கொடுக்கும் சிறிய உதவிக்கு கூட அவர்களை பாராட்டுங்கள். இது எனக்காக நீ, உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தும். பாராட்டுடன் சிறுசிறு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் உறவு வலுப்பெறும்.

அடிக்கடி கட்டி அணைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் இன்பம், துன்பம் எதிலும் உங்கள் மனைவி அல்லது கணவரை கட்டி அணைத்துக்கொள்ளுங்கள். இது இருவருக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வை கொடுப்பதுடன், அவர்களுக்கான பாராட்டாகவும் இருக்கும்.

விளையாட்டுத்தனமாக விஷயங்களை இருவரும் செய்யுங்கள்

சிறுசிறு விளையாட்டுத்தனமான விஷயங்களை இருவரும் செய்ய வேண்டும். பாடல், நடனம், இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது என உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி, நீங்கள் இருவரும் இதுபோல் விளையாடி மகிழ்ந்திருக்கும்போது அது இருவரிடையேயும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

சின்ன விஷயங்களை கூட மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்

நீங்கள் சின்ன விஷயங்களை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். உங்கள் மனைவிக்காக ஒரு தோசை செய்துகொடுப்பது, உங்கள் கணவருடன் ஒரு நீண்ட டிரைவ் செல்வது. ஒரு பெரிய பிரச்னைகளில் துணை நிற்பதைவிட அன்றாடம் நடக்கும் சிறுசிறு விஷயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டாலே போதும்.

எப்போதும் கையை கோர்த்திருங்கள்

எங்கு சென்றாலும் இருவரும் கை கோர்த்துக்கொண்டே செல்லுங்கள். அது இருவரும் எப்படி பிணைப்புடன் இருக்கிறீர்கள் என்பதை காட்டும். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும்போது, தானாகவே கருத்துவேறுபாடுகள் களையப்பட்டு ஒத்த கருத்துக்கள் ஏற்பட்டு இருவரும் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் திருமண உறவில் நிலைத்திருக்க முடிகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்