Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இதை மட்டும் செய்ங்க போதும்!-hair fall remedy stop hair fall remedy in 15 days just do this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இதை மட்டும் செய்ங்க போதும்!

Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இதை மட்டும் செய்ங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 01:00 PM IST

Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இந்த ஒரு லட்டு மட்டும் போதும். அதை தினமும் உட்கொள்ள பலன் உறுதி.

Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இதை மட்டும் செய்ங்க போதும்!
Hair Fall Remedy : தலைமுடி உதிர்வு பிர்சனையை 15 நாளில் நிறுத்தவேண்டுமா? இதோ இதை மட்டும் செய்ங்க போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தலைமுடி உதிர்வு பிரச்னை

நாளொன்றுக்கு 100 முடிகள் உதிரலாம். அதற்கு மேல் கொதுக்ககொத்தாக உதிர்ந்தால், உங்களுக்கு தலைமுடி உதிர்வு கோளாறுகள் என்று பொருள்.

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?

உங்களுக்கு மரபணுக்களாலும், உங்கள் பெற்றோருக்கு ஏற்பட்டால் உங்களுக்கும் தலைமுடி உதிர்வு ஏற்படலாம்.

தலையில் பூஞ்ஜை தொற்றுகள் ஏற்பட்டாலும் தலைமுடி உதிரலாம்.

உங்கள் தலைமுடியில் நீங்கள் செய்யும் ஹேர் ஸ்டைல்களாலும் அது இறுக்கமாகப் பின்னப்பட்டால் தலைமுடிகள் உதிரலாம்.

தலையில் நீங்கள் செய்யும் ஹேர் கேர்களாலும் முடி உதிர்வு ஏற்படாலம்.

பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகளாலும், கர்ப்பம், குழந்தை பிறப்பு மெனோபாஸ் ஆகியவற்றாலும் தலையில் இருந்து முடி உதிர்கிறது.

மருத்துவ சிகிச்சைகள், ஹீமோதெரபி போன்ற கடும் மருத்துவ சிகிச்சைகளாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள், உங்கள் உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் கிடைக்காமல் போது முடி உதிர்வுக்கு காரணமாகிறது.

மனஅழுத்தம் ஆகியவற்றாலும் உங்களுக்கு முடி உதிரலாம்.

எனவே, எந்த பிரச்னைக்கும் அதற்கான தீர்வை கண்டுபிடித்து தீர்க்காவிட்டால், அந்த பிரச்னை சரியாகாது. எனவே முடி உதிர்வுக்கும் அதற்கான காரணத்தை அறிந்துகொள்வது அவசியம்.

எனினும், இங்கு கொடுக்கப்பட்டுள்ளது ஒரு பொதுவான தீர்வு. இது அனைத்து நிலைகளுக்கும் பொருந்தாது. எனினும் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கட்டாயம் கொண்டுவரும்.

தேவையான பொருட்கள்

பாதாம்- அரை கப்

வால்நட் – கால் கப்

கடலை – அரை கப்

எள் – கால் கப்

சூரியகாந்தி விதைகள் – கால் கப்

பரங்கி விதை – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

ஃப்ளாக்ஸ் சீட் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – கால் கப்

தேங்காய் – ஒரு கப்

வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)

செய்முறை

பாதாம், வால்நட், கடலை, எள், சூரிய காந்தி விதைகள், பரங்கி விதைகள், ஃப்ளாக்ஸ் சீட்கள், தேங்காய் என அனைத்தையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை ஒவ்வொன்றாக காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஏலக்காய்ப் பொடி மற்றும் வெல்லத்தை சேர்த்து கலந்து நன்றாக உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டையை தினமும் ஒன்று கட்டாயம் சாப்பிடவேண்டும்.

இதை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது என்பதால், இதை ஒரு வாரத்திற்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.

இது முடி உதிர்வை 15 நாளில் நிறுத்துவதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.

இதை சாப்பிடும்போது பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது. மேலும் உடல் சோர்வு, வலி ஆகியவற்றையும் போக்கி உங்களுக்கு சுறுசுறுப்பைக்கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.