Thalapathy 69: கொஞ்சம் அரசியல், அதிக மாஸ்..200% விஜய் பேன்ஸ் படமாக இருக்கும் - தளபதி 69 அப்டேட் கொடுத்த எச். வினோத்
Thalapathy 69 Update: தளபதி 69 அப்டேட் கொடுத்த எச். வினோத், அந்த படம் கொஞ்சம் அரசியல், அதிக மாஸ் என 200% விஜய் பேன்ஸ் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசத்துக்கு முன்பு விஜய நடிக்க இருக்கும் கடைசி படமாக இது அமையவுள்ளது.

தளபதி விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
இதற்கிடையே கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் தற்போது தளபதி 69 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் பணியாற்றிய எச். வினோத் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.
விஜய் அரசியல் பிரவேசத்துக்கு முன்பு நடிக்கும் கடைசி படமாக இது அமைந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.