தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy 69 : வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?

Thalapathy 69 : வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?

Divya Sekar HT Tamil
May 21, 2024 08:39 AM IST

Thalapathy-69 : விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியானது.

வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?
வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியானது.

விஜய்யின் 69ஆவது படத்தில் மலையாள நடிகை

இந்நிலையில் விஜய்யின் 69ஆவது படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம். இதுதொடர்பான அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அபர்ணா பாலமுரளி இதற்கு முன்னதாக சூறரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனிடையே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு வேடங்களில் விஜய்?

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

கோட் திரைப்படம் ரீமேக் இல்லை?

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்தே விஜயின் ‘தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார்.

அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அதனை மறுத்த வெங்கட் பிரபு, கோட் திரைப்படம் ரீமேக் இல்லை எனவும், அது தன்னுடைய கதை எனவும் கூறியிருந்தார்.

செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும்

முன்னதாக, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ம்ற்றும் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியானது. அதன் படி, படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதும், விஜய் இந்தப்படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது போஸ்டர்களும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்தப்படத்தில் இருந்து அண்மையில் விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்