மாணவர்கள் கவனத்திற்கு.. வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர்கள் கவனத்திற்கு.. வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்!

மாணவர்கள் கவனத்திற்கு.. வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்!

Divya Sekar HT Tamil
Oct 16, 2024 06:57 AM IST

கனமழை எச்சரிக்கையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்னும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு.. வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்!
மாணவர்கள் கவனத்திற்கு.. வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை

புதுச்சேரி

காரைக்கால்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம்

விழுப்புரம்

தருமபுரி

கள்ளக்குறிச்சி

கடலூர்

கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை

வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்றது. நேற்று (15-10-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்

அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

இன்று (16.10.2024) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கனமழை பெய்ய வாய்ப்பு

வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர். தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை

17.10.2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.