கொய்யா இலையில் தேநீர்; இதை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டும்? அதற்கான 9 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொய்யா இலையில் தேநீர்; இதை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டும்? அதற்கான 9 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

கொய்யா இலையில் தேநீர்; இதை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டும்? அதற்கான 9 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 16, 2024 12:28 PM IST

கொய்யா இலை தேநீரை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டியதற்கான காரணங்கள் என்ன?

கொய்யா இலையில் தேநீர்; இதை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டும்? அதற்கான 9 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
கொய்யா இலையில் தேநீர்; இதை பெண்கள் அதிகம் எடுக்கவேண்டும்? அதற்கான 9 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தலைமுடியின் வேர்க்கால்களுக்கு கொய்யா இலைகள் ஊட்டமளிக்கிறது. இதனால், உங்கள் தலைமுடி உதிராமல் காக்கிறது. அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது உங்கள் தலைமுடியை வலுவாக்குகிறது. இதனால் உங்கள் தலைமுடியின் பொலிவும் அதிகரிக்கிறது.

உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

கொய்யா இலை தேநீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

செரிமான ஆரோக்கியம்

கொய்யா இலை தேநீரில் இயற்கை நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நுண்ணுயிர்கள் அதிகம் கொண்டது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கிறது. இது உங்களுக்கு சிறந்த குடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்க உதவுகிறது

கொய்யா இலை தேநீரில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் அதிகம் உள்ளன. இது வலிகள் மற்றும் வயிறு அசவுகர்யங்களைப் போக்குகிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும அசவுகர்யங்களைக் குறைக்கிறது. இது மாதவிடாய் காலங்களில் பருக ஏற்றது.

ஹார்மோன்கள் சமம்

பெண்களுக்கு ஹார்மோன்கள் சமமாக இருந்தாலே போதும், அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் இருக்கும். எனவே மாதவிடாய் கால வலியைப் போக்க வேண்டுமெனில், அவர்கள் இந்த பானத்தை கட்டாயம் பருகவேண்டும். இது அவர்களின் வலிகளை மட்டும் போக்கவில்லை, ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்குகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கொய்யா இலைகளில் உள்ள கெமிக்கல்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதாக நம்பப்படுகிறது. இது உங்கள் உடலில் பொதுவான தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உங்கள் உடலின் இயற்கை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கொய்யா இலை தேநீர் கொட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மேலும் இது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

கொய்யா இலைத் தேநீரில் ரத்த சர்க்கரையை முறைப்படுத்தும் தன்மை உள்ளது. இது நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு சிறந்த தேர்வாகும். நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தையும் இது குறைக்கும். எனவே, ரத்த சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தும் இந்த கொய்ய இலைத் தேநீரை பருகுவதை பெண்கள் வழக்கமாகக் கொள்ளவேண்டும்.

சரும ஆரோக்கியம்

கொய்யா இலைத் தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. மேலும் முகப்பருக்களைப் போக்குகிறது. தெளிவான சருமத்தைக் கொடுக்கிறது. இது வயோதிக அறிகுறிகளைப் போக்குகிறது. இது சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.