நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீன் மனு ரத்து.. சுற்றி வளைத்த போலீஸார்.. அடுத்தடுத்து திருப்பம்.. என்ன நடக்கிறது?
நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீன் மனு ரத்து.. சுற்றி வளைத்த போலீஸார்.. அடுத்தடுத்து திருப்பம்.. என்ன நடக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

தெலுங்கு பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் நடிகர் மோகன் பாபுவின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபு தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது. இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் இந்திய வான் படை உயர் அதிகாரியாக நடித்திருப்பார்.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மோகன் பாபு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஜல்பல்லி இல்லத்துக்கு வந்துள்ளார். அவரது வாக்குமூலத்தைப் பெற டிசம்பர் 13ஆம் தேதியான நேற்று போலீசார் விரைந்தனர். அதன்பின், நடிகர் மோகன் பாபு அங்கு இல்லை எனக்கூறப்படுகிறது. மேலும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தலைமறைவாகியுள்ள நடிகர் மோகன் பாபு எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து நடிகர் மோகன் பாபுவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
