Green Coffee Benefits: உடல் எடை நிர்வகிப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை..வீட்டிலேயே க்ரீன் காபி தயார் செய்வது எப்படி?
உடல் எடையை நிர்வகிப்பது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பானமாக க்ரீன் காபி இருந்து வருகிறது. வீட்டிலேயே க்ரீன் காபி தயார் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

க்ரீன் காபி பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பிரபலமடைந்துள்ளது. வழக்கமான வறுத்த காபி போலல்லாமல், க்ரீன் காபியில் அதிகப்படியான குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது எடை இழப்பு உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கிறது. க்ரீன் காபியின் நன்மைகளை முழுமையாக பெற, க்ரீன் காபி சப்ளிமெண்ட் அல்லது இயற்கையாக அதை தயார் செய்து எடுத்துக்கொள்ளலாம். வீட்டிலேயே க்ரீன் காபி எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்
க்ரீன் காபி என்றால் என்ன?
க்ரீன் காபி என்பது வறுக்கப்படாத வடிவத்தில் இருக்கும் பச்சை நிற காபி பீன்ஸ் ஆகும். வழக்கமான காபி பீன்ஸ் சுவையை வெளிக்கொண்டு வர வறுக்கப்படுகிறது. ஆனால் க்ரீன் காபியானது காபி கொட்டைகள் பச்சை நிறத்தில, அதாவது அதன் மூல வடிவத்தில் உட்கொள்ளப்படுகிறது.
இந்த வறுக்கப்படாத காபி பீன்களில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்ற கலவை ஆகும். இது வறுத்தலின் போது பெருமளவில் அழிக்கப்படுகிறது. இந்த கலவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் அவை தொடர்புடையதாக உள்ளது