உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசிய தேவையாக இருந்து வரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் எவை என்பதை பார்க்கலாம் 

By Muthu Vinayagam Kosalairaman
Aug 29, 2024

Hindustan Times
Tamil

உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை செல்களை சேதப்படுத்தி, தீவிர உடல் நல பிரச்னையை ஏற்படுத்தும்

பழங்கள், காய்கறிகள், நட்ஸ், உலர் பழங்கள் என அனைத்திலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

கிரான்பெர்ரி, சிவப்பு திராட்சை, பீச், ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அத்தி, செர்ரி, கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன

உலர் பழங்களான பேரிக்காய், பிளம்ஸ், ஆப்பிள், பீச், அத்தி, பேரிச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம். அதேசமயம் இவற்றில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் செறிவுக்காக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் தவிர்க்கவும்

ப்ராக்கோலி, பசலை கீரை, கேரட், உருளை ஆகியவற்றில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கல் இருக்கின்றன. இதுதவரி முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, சீனி கிழங்கு, பூசணி, பச்சை காய்கறிகளிலும் கணிசமான அளவு உள்ளன

மசாலா பொருள்களான இலவங்கப்பட்ட, ஆர்கனோ, மஞ்சள், சீரகம், இஞ்சி, மிளகு, பூண்டு, ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன

காலை உணவாக கார்ன் ப்ளேக்ஸ், ஓட்மீல், கிரானோலா போன்றவை எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக ஊட்டச்சத்து நிறைந்திருப்பதுடன் ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையையும் பூர்த்தி செய்யலாம்

வால்நட், ஹசல் நட், பிஸ்தா, பாதாம், முந்திரி போன்றவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமா உள்ளன. சாண்ட்விச்சில் பயன்படுத்தப்படும் பீநட் பட்டரிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

பானங்களை பொறுத்தவரை க்ரீன் டீ, பிளாக் டீ, ஆப்பிள் ஜூஸ் போன்றவை ஆன்டிஆக்ஸிடன்களின் மூலமாக இருக்கின்றன. ரெட் ஒயின், பீர் பானம் போன்றவற்றிலும் இவை உள்ளன

அல்லி விதைகளின் நன்மைகள்