நெல்லிக்காய்- மிளகு- திப்பிலி ரசம்; மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை ஓடஓட விரட்டும்!
நெல்லிக்காய்- மிளகு- திப்பிலி ரசம் மூன்றையும் சேர்த்து ஒரு ரசம் வைத்து சாப்பிட்டால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை ஓடஓட விரட்டும்.

மழைக் காலத்தில் சளி இருமலை விரட்டியடிக்கும் நெல்லிக்காய் – மிளகு- திப்பிலி ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை விரட்ட அசைவப் பிரியர்களுக்கு நண்டு ரசம் எப்படி உதவுமோ, அதேபோல், சைவப் பிரியர்களுக்கு நெல்லிக்காய் ரசம் மிகவும் நல்லது. இதை செய்வதும் எளிது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். நீங்கள் கூடுதலாக நெல்லிக்காய் மற்றும் திப்பிலி மட்டும் வாங்கிக்கொண்டால் போதும். இதை நீங்கள் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சளி இருந்தால் அது அப்படியே முறிந்து வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். நெல்லிக்காயில் செய்யும் ரசம் என்பதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே உங்கள் உடலுக்கு இயற்கையாகவே எதிர்ப்புத்திறன் கிடைத்துவிடும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து