Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் - ஆய்வில் அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் - ஆய்வில் அதிர்ச்சி!

Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் - ஆய்வில் அதிர்ச்சி!

Priyadarshini R HT Tamil
Jun 28, 2024 07:00 AM IST

Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் - ஆய்வில் அதிர்ச்சி!
Global Warming : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் - ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள நாடு என்பதால், இந்தியாவில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுத்துகிறது. எனவே விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. 

"Forum of Enterprises for Equitable Development (FEED) மற்றும் Development Intelligence Unit (DIU) இணைந்து சமீபத்தில் அளித்த அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் அதிதீவிர பருவநிலை மாற்றங்கள் 60 சதவீத குறு விவசாயிகளை, (Marginal farmers) பயிர் உற்பத்தி மற்றும் பயிரிழப்பு நடவடிக்கைகள் மூலம் கடுமையாக பாதித்துள்ளது என்ற செய்தியை பதிவுசெய்துள்ளது.

அந்த அறிக்கையில் விவசாயிகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் வறட்சி, அதைத் தொடர்ந்து வரும் கனமழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி, பயிர்களை அழித்ததாக விவசாயிகள் ஆதாரங்களுடன் தெரியப்படுத்திய செய்தியை பதிவுசெய்துள்ளது.

புவிவெப்பமடைதல் காரணமாக எழும் பசுமைக்குடி வாயுக்கள் உள்ளூர் தட்பவெப்பநிலை மற்றும் மழைப்பொழிவில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பாதித்துள்ளது.

"Impact of Climate change on marginal farmers" அறிக்கையில் குறு விவசாயிகள் பலரும் பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிற பண உதவி வசதியை பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

ஒரு எக்டேருக்கு குறைவான நில உடமையைக் கொண்டுள்ள குறு விவசாயிகள் இந்திய வேளாண் துறையில் 68.5 சதவீதம் என இருந்தும், 24 சதவீதம் பயிர் பரப்பை மட்டுமே சொந்தமாகக் கொண்டுள்ளனர்.

41 சதவீத விவசாயிகள் வறட்சியையும், 33 சதவீதம் விவசாயிகள் கூடுதல் மழைப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பயிரிழப்புகளை சந்தித்ததாக அறிக்கையில் செய்தி உள்ளது.

விவசாயிகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், நாள்பட்ட கோடைக்காலம் மற்றும் வழக்கத்திற்கு மாறாக நிகழும் வெப்பஉயர்வு காரணமாகவும் வேளாண்மையில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

10th Agriculture Census of Government of India அறிக்கையின்படி தமிழகத்தில் 93 சதவீதம் நிலஉடமை சிறு மற்றும் குறு விவசாயிகள் வசம் இருப்பதாகவும், 62 சதவீதம் பயிர்வைக்க உதவும் விவசாய நிலங்கள், அவர்கள் வசம் இருப்பதாகவும் செய்திகள் உள்ளது.

கடலின் தரையில் தேங்கும் Sediment ஆய்வு பசிபிக், கலிபோர்னியா பகுதிகள் மேற்கொள்ளப்பட்டபோது, (ஆய்வாளர்கள்@NIOZ & Universities of Utrecht and Bristol), கரியமிலவாயு வளிமண்டலத்தில் இரு மடங்காக உயரும்போது, புவியின் வெப்பம் சராசரியாக 7-14 டிகிரி வரை உயரும் (இதற்கு முன்னர், இந்த மதிப்பு குறைவாக கணக்கிடப்பட்டிருந்தது) ஏன சமீபத்தில் கண்டறியப்பட்டு அதன் முடிவுகள், "Nature Communications" ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழகம் மற்றும் இந்தியா, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்க முன்வர வேண்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.